logo
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம் கொண்டு வரும்: பாஜக தேசிய செயலர் தகவல்

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம் கொண்டு வரும்: பாஜக தேசிய செயலர் தகவல்

22/Feb/2021 11:58:07

சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் சட்டம் கொண்டு வரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார். நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது ஜனநாயகத்தை பலவீனமாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் காரணமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்


கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவர் எழுதிய பிகாஸ் இந்தியா கம்ப்ர்ஸ்ட் நூல் வெளியிட்டு விழாவில் ராம் மாதவ் பேசியதாவது: ஒரு நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க முடியும், அரசுகளை மாற்ற முடியும், ஆட்சியை மாற்று முடியும் என்ற அளவுக்கு சமூக ஊடகங்கள் சக்திவாய்ந்தவையாக வளர்ந்துள்ளன நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவது ஜனநாயகத்தை பலவீனமாக்குவது போன்றவற்றுக்கு சமூக ஊடகங்கள் காரணமாக உள்ளன. 


அவற்றின் கரங்கள் எல்லையற்றவையாக இருப்பதால் ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இப்போது இருக்கும் சட்டங்களை சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த போதுமானவையாக இல்லை. எனவே, இது தொடர்பான புதிய சட்டங்களை இயற்ற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உரிய சட்டங்கள் இயற்றப்படும்

இந்தப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த பல முக்கிய முடிவுகள் தொடர்பான எனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தொடர்ந்து மகாத்மா காந்தி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ராம் மாதவ், தேச வளர்ச்சியில் பங்களித்த எந்த தலைவரையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறைத்து மதிப்பிடவில்லை.

மகாத்மா காந்தி, மிகச்சிறந்த தலைவர். அவரது அகிம்சை கொள்கை வேறு உலக தலைவர்களால் பின்பற்றப்படுகிறது. காந்தி நேருவுக்கு இடையிலான கடிதங்கள் மூலம் அவர்களுக்கு இடையே பல்வேறு விஷயங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதற்காக நாம் அந்தத் தலைவர்களை அவமதிக்கிறோம் என்று கூற முடியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் காலை பிரார்த்தனையில் மற்ற தலைவர்களுடன் மகாத்மா காந்தியின் பெயரும் இடம் பெறுகிறது என்றார்

Top