logo
அந்தியூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் எம்எல்ஏ நிதியில் சிசிடிவி காமெரா பொருத்த காவல்துறை நடவடிக்கை

அந்தியூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் எம்எல்ஏ நிதியில் சிசிடிவி காமெரா பொருத்த காவல்துறை நடவடிக்கை

25/Sep/2020 05:37:25

இது குறித்து ஈரோடு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட தகவல்:ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினரின் மேம்பாட்டுத்திட்டம்(2019-2020)மூலம் அந்தியு+h; சுற்றுவட்டாரங்களில் 16 இடங்களில் கண்காணிப்பு நிழற்பட கருவி (சிசிடிவி) பொருத்துவதற்கு மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பொருட்டு மூடி முத்திரையிட்ட ஒப்பந்த புள்ளிகள் தகுதி வாய்ந்த நிறுவனத்திடமிருந்து வரவேற்கப்படுகிறது. பொருளின் பெயர், மொத்த மதிப்பு கண்காணிப்பு நிழற்படகருவி 10,00,000 (ரூபாய் பத்து லட்சம் மட்டும்)மேற்கூறிய ஏல அறிவிப்பு தொடப்பான இதர விவரங்கள் (Eligibility Criteria and  Equipment Specification) அடங்கிய குறிப்பாணை 24.09.2020 -ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து ஈரோடு மாவட்ட காவல் அலுவலக கொள்முதல் குழு மூலம் வழங்கப்படும்.  தகுதி வாய்ந்த நிறுவனங்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் (தலைமையிடம்)  உரிய  அங்கீகார கடிதம் வழங்கி விவரம் பெற்றுகொள்ளலாம். 

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வருகிற 3.10.2020 -ஆம் தேதி மாலை 3 மணி வரை மூடி முத்திரையிடப்பட்ட விபரப்புள்ளிகள் பெறப்படும். ஒப்பந்த புள்ளிகளை வருகிற 4.10.2020 -ஆம் தேதி காலை 10  மணிக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொள்முதல் குழு முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் திறக்கப்படும். பிற விவரங்களுக்கு, ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளரை (தலைமையிடம்)  0424-2264100 - என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 


Top