logo
செல்வாக்கே செல்லுபடியாகும்... ஈரோடு மாவட்டத்தில் களமிறமிறக்க  செல்வாக்கு நபர்கள் பட்டியல் தயார்...!

செல்வாக்கே செல்லுபடியாகும்... ஈரோடு மாவட்டத்தில் களமிறமிறக்க செல்வாக்கு நபர்கள் பட்டியல் தயார்...!

16/Feb/2021 09:24:10

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில்  மக்கள் செல்வாக்கு மிக்க பிரமுகர்களையே போட்டியிட    வைக்கும்   நோக்கத்தில்  அதிமுக, திமுக கட்சிகள்  வேட்பாளர்கள் பட்டியலை  தயாரித்து  வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 2021 -ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத்  தேர்தல் மார்ச் மாதம்  அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன. அதிமுகவைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி,, திமுகவில் மு.க.ஸ்டாலின்  உள்பட பல்வேறு  அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் கூட்டணி முழுமையடையாமல் உள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து தொகுதி வாரியாக  தொகுதி முழுவதும்  செல்வாக்கு மிகுந்த  பிரமுகர்கள் குறித்த விவரத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் உளவுத் துறை மற்றும் அதிமுக, திமுக வின்  தனியார் ரகசிய .உளவு பிரிவினர் அதற்கான பணியில் ஈடுபட்டனர். 

தற்போது இரு கட்சியிலும் தொகுதி வாரியாக தொகுதிக்கு செல்வாக்கு மிகுந்த மூன்று நபர்கள் குறித்த பட்டியலை  ரெடி செய்து ஒப்படைக்கப்பட்டுள்ளது . அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவில் தற்போதுள்ள  எம்எல்ஏ தென்னரசு, மாணவரணி நந்தகோபால், பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இதில் தற்போதுள்ள எம்எல்ஏ- தென்னரசுக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 - தேர்தலில் மனோகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டபோது  எழுந்த பல்வேறு புகார்கள் காரணமாக  வாய்ப்பு பறிபோனது. மக்கள் சேவை மூலம்  அனைத்து மக்களிட ம் நன் கு அறிமுகமான மாணவரணி நிர்வாகி நந்தகோபாலுக்கு  இந்தமுறை போட்டியிட  வாய்ப்பு கிடைக்கும் என  பரவலாக பேசப்படுகிறது.

இதைப்போல, ஈரோடு மேற்கு தொகுதியில்  தற்போதைய எம்எல்ஏ- கே.வி. ராமலிங்கம் உள்ளிட்டோர் பெயர் பரிசீலனையில் உள்ளது. இதனிடையே  ஈரோடு மேற்கு தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  களமிறங்க உள்ளதாக  பேச்சு எழுந்தது. ஆனால்.  எடப்பாடி தொகுதியை விட்டு அவர் வேறு தொகுதியில் போட்டியிடமாட்டார் என்ற நம்பிக்கையால், ஈரோடு  மேற்கு தொகுதி  கே.வி. ராமலிங்கத்திற்கே மீண்டும்  கிடைக்கக்கூடிய  வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதேபோல் ,பெருந்துறை தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ- தோப்பு வெங்கடாசலத்துக்கு  மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பதில் குழப்பமும், தயக்கமும் ஏற்பட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வைகை தம்பி, ஜே.கே ஆகியோரும்  வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க  வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கோபி, பவானி தொகுதியில் மீண்டும்  தற்போதுள்ள அமைச்சர்கள்தான் போட்டியிடுவார்கள் என்பதில் சிக்கல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  மொடக்குறிச்சியில் கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வாய்ப்புக்  கேட்பதால் அதிமுக   கூட்டணியில்   தமாகா முன்னாள் எம்எல்ஏ- விடியல் சேகர், திமுக   கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட வாய்ப்புக் கேட்பதாக  கூறப்படுகிறது. 

அந்தியூர், பவானிசாகர் தொகுதிகளில்  செல்வாக்கு மிகுந்த பிரமுகர்கள் குறித்த பட்டியல்  தயார் நிலையில் உள்ளது. கூட்டணி நிலவரம் தெரிந்த பிறகே இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள்  குறித்த விவரம் தெரிய வரும் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது..

திமுக சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் குறித்த பட்டியல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலிடம் தயாராக உள்ளது. இதில் யாருக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன்  திமுக  அதிமுக கூட்டணி  கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதுதான் களத்தில் உள்ள தற்போதைய நிலவரம் .STORY  BY..C.RAAJ-REPORTER, GOPI.

Top