logo
ஈரோட்டில் சட்ட நகல் கிழித்தெறியும் போராட்டம்

ஈரோட்டில் சட்ட நகல் கிழித்தெறியும் போராட்டம்

25/Sep/2020 11:51:41


விவசாய விரோத 3 சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,  விவசாயிகளுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் சட்ட நகல் கிழித்தெரிப்பு போராட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விவசாயிகளுக்கு குரல்வளையைநசுக்கும் மத்திய அரசை கண்டித்து பாடை கட்டி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் J.M.ஹசன் பாபு, மக்கள் சிவில் உரிமை கழகத்தின் (PUCL) மாநில தலைவர் கண.குறிஞ்சி, நீரோடை அமைப்பின் தலைவர் தோழர்.நிலவன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநகர தலைவர் சாதிக் பாஷா, விமன் இந்தியா மூமென்ட் (WIM) மாநில பொருளாளர் ஷஃபியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் குறிஞ்சி பாஷா, மாவட்ட செயலாளர் முஹம்மது அகீல், வர்த்தகர் அணியின் மாவட்ட தலைவர் பஜ்லுல் ரகுமான், விமன் இந்தியா மூமென்ட் (WIM) மாவட்ட தலைவர் சுபைதா, பொதுச்செயலாளர் சபீனா, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்போராட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் முனாஃப், செயலாளர் ஜமால்தீன், பவானி தொகுதி தலைவர் தர்வேஸ், செயலாளர் அபூபக்கர் சித்தீக், மேற்கு தொகுதி செயலாளர் சபீர் அஹமது,  கோபி நகர துணை ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முசாதிக் அலி நன்றி கூறினார்.


Top