logo
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம்: காணொளி வாயிலாக பிப்.14-இல் பிரதமர், முதல்வர் அடிக்கல்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டம்: காணொளி வாயிலாக பிப்.14-இல் பிரதமர், முதல்வர் அடிக்கல்

11/Feb/2021 10:37:57

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவுத்திட்டமான காவோp-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு  பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர்  வருகிற 14.02.2021 அன்று காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளதாக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மதயாணிப்பட்டி கிராமம் அருகில் ஆவூர் கண்மாய்களுக்கு நீர் வழங்கும் வகையில் பேராம்பூர்  வாரியில் அணைக்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 

பின்னர், செய்தியாளா;களிடம் கூறியதாவது: விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட மதயாணிப்பட்டி கிராமம் அருகில் ஆவூர் கண்மாய்களுக்கு நீர் வழங்கும் வகையில் பேராம்பூரில்  ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

 இந்த அணைக்கட்டின் வலது பக்கம் தலைமதகு அமைத்து ஆவூர் கிராமத்தில் உள்ள சின்னக்குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய குளங்களுக்கு நீர் வழங்கப்படும். இதன் பயனாக இப்பகுதியில் உள்ள சுமார் 205.60 ஏக்கா; பாசன நிலங்கள் மேம்பாடு அடைவதுடன்,  நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும் வாய்ப்பாக அமையும்.

காவிரி வைகை குண்டாறு இணைப்புத்திட்டத்துக்கு பிப்.14-இல் பிரதமர், முதல்வர் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவுத்திட்டமான காவிரி வைகை குண்டாறு இணைப்புத்திட்டத்தை பாரத பிரதமர் மோடி அவர்களும்,  தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களும்  இணைந்து வருகின்ற 1(4.2.2021) ஞாயிற்றுக்கிழமை  காணொளிக்காட்சி வாயிலாக இப்பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்க உள்ளார்கள். 

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தின் தற்போதய நிலை மாறி மஞ்சள், கரும்பு, நெல் விளையக் கூடிய செழுமையான பூமியாக மாறும். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த பயன்பெறுவார்கள்.

 இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ;ந்த ஒட்டு மொத்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சார்பில்  நன்றியை  தெரிவித்துக் கொள்வதுடன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்த  முதல்வருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவிப் பொறியாளர்கள் உமாசங்கர், கார்த்திக், சாதிக்இப்ராஹிம் உள்பட  தொடர்புடைய அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.


Top