logo

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினமும் 15 மருத்துவ முகாம்கள்

25/Sep/2020 08:44:19

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா  வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. மொத்த பாதிப்பில் 60 சதவீதம் பேர் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். எனவே இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மிஷன் ஜீரோ என்னும் திட்டத்தின் மூலம் நடமாடும் இலவச மருத்துவ சளி, காய்ச்சல் பரிசோதனை முகாம் மாநகர் பகுதியில்  60 வார்டுகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் இடங்களில் இந்த நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் 10 இடங்களில் இந்த நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதுபோக குடிசை பகுதி, நோய் பாதிப்பு  உள்ள  இடங்களில் என மொத்தம் நாள் ஒன்றுக்கு 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் மருத்துவ முகாமில் ஒரு டாக்டர் ஒரு செவிலியர் மற்றும் மருந்தக உதவியாளர்கள் இருப்பார்கள். இதில் சளி காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சளி காய்ச்சல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் கொரோனா  பரிசோதனை செய்வதற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மருத்துவ முகாம் மூலம் சளி காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று உள்ளனர். பொது மக்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதி அருகே  மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன்  பங்கேற்று வருகின்றனர்.


Top