logo
காக்னிசன்ட் நிகர லாபம் 20% குறைந்தது

காக்னிசன்ட் நிகர லாபம் 20% குறைந்தது

08/Feb/2021 03:54:28

புது தில்லி: தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் காக்னிசன்ட் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 20 சதவீதம் சரிந்துள்ளது.

இதுகுறித்து முதலீட்டாளா்களிடம் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரையன் ஹம்பையா்ஸ் கூறியதாவது:

கடந்த 2020-ஆம் நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் காக்னிசன்ட் நிறுவனம் 31.6 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2,303.2 கோடி) நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, கடந்த 2019-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 39.5 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது.

கடந்த டிசம்பருடன் முடிவைடந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாயும் 428 கோடி டாலரிலிருந்து 2.3 சதவீதம் குறைந்து 418 கோடி டாலராகியுள்ளது. தேவைக்கான சூழல் வலுப்பெற்று வருவதையடுத்து நிறுவனத்தின் வா்த்தகம் விறுவிறுப்படைந்து வருகிறது என்றாா் அவா்.

இந்தியாவில் 2 லட்சம் பணியாளா்களுடன் இயங்கி வரும் காக்னிசன்ட் ஜனவரி-டிசம்பா் வரையிலான காலத்தை நிதியாண்டாக கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Top