logo
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்: ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தகவல்

03/Feb/2021 04:32:05

 புதுக்கோட்டை, பிப்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்  பின்வரும் நாள்களில் நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கும், மத்திய அரசின் தனித்துவம்; வாய்ந்த அடையாள அட்டை (UDID) இதுநாள்வரை விண்ணப்பிக்காதவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளில் வாக்காளர் அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக் குமான  சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

 08.02.2021-இல் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்;திறனாளிகள் நல அலுவலகத்திலும், 09.02.2021 -இல் கந்தர்வக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 10.02.2021 -இல்  கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 11.02.2021-இல் திருவரங்குளம்; வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 12.02.2021 -இல்  திருமயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

மேலும், 16.02.2021 -இல் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 17.02.2021 -இல் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 18.02.2021 -இல் அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 19.02.2021 -இல் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலகத் திலும், 23.02.2021 -இல் குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 24.02.2021 -இல் அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 25.02.2021 -இல் ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 26.02.2021 -இல் மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

இச்சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், ரேசன் கார்டு அசல் மற்றும் நகல், புகைப்படம் 4  போன்ற ஆவணங்களும்,  தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID)   பெற விண்ணப்பிக்காதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், ரேசன்கார்டு அசல் மற்றும் நகல்,  புகைப்படம்-2 ஆகிய ஆவணங்களும், வாக்காளர் அட்டை பெறாத 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், ரேசன்கார்டு அசல் மற்றும் நகல், புகைப்படம் 2 ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.

Top