logo
செப்.28-இல் காணொளி மூலம் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு முகாம்

செப்.28-இல் காணொளி மூலம் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு முகாம்

24/Sep/2020 01:27:05

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு முகாம் வரும் (28.09.2020) திங்கட்கிழமை காணொளிக்காட்சி மூலம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்  வெளிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு நாள்  கூட்டம் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தலைமையில்  வரும் திங்கள்கிழமை  காலை 11 மணியளவில் காணொளிக்காட்சி மூலம் Zoom App> Google Meet -ல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொளிக் காட்சி வாயிலாகக்  கலந்துக் கொள்ளும் வகையில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர்  அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர்  அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு காணொலிக்காட்சி மூலம் இக்கூட்டத்தில் முகக் கவசம் அணிந்து,சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். 

Top