logo
சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க ஈரோடு மாவட்ட  திமுக, அதிமுக நிர்வாகிகளிடையே கடும் போட்டி

சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க ஈரோடு மாவட்ட திமுக, அதிமுக நிர்வாகிகளிடையே கடும் போட்டி

26/Jan/2021 11:27:16

ஈரோடு: சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் களமிறங்க வாய்ப்பைப் பெறுவதற்கு அதிமுக, திமுக நிர்வாகிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கான  தேர்தல் ஓரிரு வாரங்களில்  அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது.. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மாவட்ட வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.  திமுக சார்பில் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிபாளையம், பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானிசாகர் என மொத்தம் 8 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கி உள்ளன.

 எம்ஜிஆர், ஜெயலிலதா ஆகியோருக்கு அதிகமான  ஆதரவைக் கொடுத்த வரலாற்றைக் கொண்டது ஈரோடு மாவட்டம்.   அதேபோல் திமுகவும் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா- கருணாநிதி ஆகிய இரண்டு  அரசியல் ஆளுமைகளின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், வேட்பாளர்கள் அறிவிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திமுக அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் ஒரு வகையான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு தேர்தலில் அனைத்து வகையான ஜாதியினருக்கும் சீட் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக., திமு.க,, நிர்வாகிகளிடம் காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில்  ஈரோடு கிழக்கு தொகுதியில் 30 சதவீதத்துக்கு  மேல் முதலியார் சமூகத்தினர் இருப்பதால்  அவர்களை சார்ந்தவர்களுக்கு சீட் வழங்க வேண்டும்  என  அதிமுக-திமுக  நிர்வாகிகளிடம் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீட் டிங் எம்எல்ஏ-வாக தென்னரசு, மீண்டும் களமிறங்க கட்சி மேலிடத்தில் வாய்ப்பு கேட்டுள்ளார்.  இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக, சார்பில் தென்னரசு, மாணவரணி நந்தகோபால், பெரியார் நகர் மனோகரன்உள்ளிட்டோர் சீட் கேட்க வாய்ப்பு உள்ளது. இதில்,   மாணவரணியை சேர்ந்த நந்தகோபாலுக்கு சீட் வழங்க வேண்டும் என்ற கட்சி நிர்வாகிகள் கட்சி மேலிடத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திமுகவில்  மாநில நிர்வாகியான முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார்,  குறிஞ்சி சிவக்குமார் ஆகியோர் சீட் கேட்க உள்ளதாக தெரிகிறது. இதேபோல், ஈரோடு மேற்கு தொகுதியில் தற்போதைய  எம்எல்ஏ- கே.வி.ராமலிங்கம், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், கே.சி.,பழனிசாமி உள்ளிட்டோர்  வாய்ப்பு  கேட்க உள்ளதாக தெரிகிறது.

திமுக, சார்பில் கிழக்கு தொகுதியில்   களமிறங்கலாமா அல்லது பவானி தொகுதிக்கு மாறலாமா என்ற குழப்பத்தில்  முத்துசாமி உள்ளதாக  கூறப்படுகிறது. காரணம், பவானி தொகுதியில் முத்துசாமி ஏற்கெனவே வெற்றிப்பெற்றுள்ளார். ஈரோடு தொகுதியில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவினார்.  இருப்பினும் கிழக்கு தொகுதியில் சீட் பெற முத்துசாமி,  செந்தில்குமார், மாநகர செயலாளர்  சுப்பிரமணி, முன்னாள் மேயர் குமார் முருகேஷ், திண்டல் குமாரசாமி , எஸ்எல்டி ஆகியோர் பெற முயற்சிக்கின்றனர்.

பெருந்துறை தொகுதியில் தற்போதைய  எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் மீது கட்சித்தலைமை அதிருப்தியில் உள்ள காரணத்தால் பெருந்துறை தொகுதியை கூட்டணி கட்சியினருக்கு தாரை வார்க்க கட்சி மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. இருப்பினும், அதிமுக., போட்டியிட்டால், சீட் பெற  தோப்பு வெங்கடாசலம், வைகை தம்பி என்கிற ரஞ்சித்குமார், ஜெயக்குமார் ஆகியோரிடையே போட்டி  போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக வில் பெருந்துறை தொகுதியை கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  இங்கு ஒதுக்கீடு இல்லை என்றால் பவானிசாகர் ஒதுக்க வாய்ப்பு உள்ளது. கோபி சட்டப்பேரவை தொகுதியில்  அதிமுக-வில் செங்கோட்டையன் மீண்டும் களமிங்குவார். திமுக-வில் கோபி தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது. 

ஆனால், காங்கிரஸ்  கட்சி சார்பில் கோபியில் போட்டியிட விருப்பம் இல்லை என தெரிகிறது. கோபி தொகுதிக்கு பதிலாக ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கேட்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கோபியில் திமுக சார்பில்  போட்டியிட்டால் செங்கோட்டையனின் உறவினர் செல்வம் அல்லது முன்னாள் அமைச்சர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ- வெங்கிடு மகன்கள் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

பவானி அல்லது அந்தியூர்  தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான பாமக-வுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது. பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டால் ஜி.கே. மணி  வாய்ப்புக் கேட்பதாக தெரிகிறது. அவர் போட்டியிடாத பட்சத்தில் இத்தொகுதிக்குள்பட்ட, கட்சி பணியில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் ஆறுமுகம், பரமசிவம், கோபால், வெங்கடாசலம் ஆகியோர் வாய்ப்பு கேட்கின்றனர்.  பவானிசாகர்  தொகுதியில் அதிமுக சார்பில் ஈஸ்வரன் அல்லது தமிழ்ச்செல்வி ஆகியோர் களமிறங்க வாய்ப்பு  உள்ளது.

திமுக கூட்டணி சார்பில் கம்யூனிஸ்ட் அல்லது திமுக நேரடியாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. பவானி  அல்லது அந்தியூர் தொகுதியில் அமைச்சர் கருப்பணன் மீண்டும் களமிங்க வாய்ப்பு உள்ளது. அமைச்சர் நிற்கும் இடத்தில்  திமுக களமிறங்கும் என ஸ்டாலின் அறிவித்துள்ளதால், அத்தொகுதியில் திமுக களமிறங்க வாய்ப்பு உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக-வில் சிட்டிங் எம்எல்ஏ  உள்ளிட்டவர்கள் சீட் பெற முயற்சி செய்கின்றனர்.

திமுக-வில் கூட்டணி கட்சியான கொமதேக.,வுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், சீட் பெருவதில் அதிமுக., திமுக, பாமக, கொமதேக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் கடுமையான போட்டி நிலவ துவங்கி உள்ளதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாகி உள்ளது. சி.ராஜ்-நிருபர்-ஈரோடு.

Top