logo
காலிங்கராயன் உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

காலிங்கராயன் உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

21/Jan/2021 12:20:15

ஈரோடு, ஜன: காலிங்கராயன் உருவச் சிலைக்கு திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 திமுக சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் காலிங்கராயன் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, நிர்வாகிகள் வி.சி.சந்திரகுமார், குறிஞ்சி சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் மாநில அமைப்பாளர் துரைராஜா, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மலை மாவட்டச் செயலாளர் லோகநாதன்,  பவானி நகரச் செயலாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், பல்வேறு பொதுநல அமைப்புகள் பொதுமக்கள் திரண்டு வந்து காலிங்கராயன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்ததோடு, காலிங்கராயன் வாய்க்காலில் மலர் தூவி வழிபாடு நடத்தினர்.

Top