logo
தனியார் பள்ளிகளின்ஆசிரியர்கள்  பணியாளர்கள்,வாகன ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை

தனியார் பள்ளிகளின்ஆசிரியர்கள் பணியாளர்கள்,வாகன ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை

10/Jan/2021 07:35:48

புதுக்கோட்டை, ஜன:   புதுக்கோட்டையில்  தலைவர் அஸ்ரப்அன்சாரி தலைமையில்  நடைபெற்ற தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


புதுக்கோட்டை கே.எம். திருமண   மஹாலில் நடை பெற்ற கூட்டத்துக்கு நிர்வாகிகள் சக்திவேல்,டைமண்ட் பஷீர் , ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:

மாணவர்கள் எதிர்கால  நலனை  கருத்தில் கொண்டு எல்.கே.ஜி .முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளையும் உடனே திறக்க  வேண்டும். இந்தக் கல்வியாண்டில் குறைந்த பட்சம் 130 வேலை நாட்களாவது பள்ளிகளை நடத்த வேண்டும். சட்டமன்ற  தேர்தல் நடக்கவுள்ள  சூழ்நிலையில் நிர்வாக காரணங்களுக்கு மட்டும் பள்ளிகளை விடுமுறை விடவேண்டும்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள்,வாகன ஓட்டுனர்கள் ஆகியோர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பள்ளிகள் திறக்காத  இந்த காலத்தில் தனியார் பள்ளிகளில்  பணிபுரியும்  ஊழியர்களின் அனைவருக்கும்  நிவாரணத் தொகையை  அரசு வழங்க வேண்டும். 2020-21 -ஆம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை கல்வி கட்டண நிர்ணயக்குழு  உடனே நிர்ணயம் செய்து வழங்கவேண்டும். 

 மேலும் பள்ளிகளை  நேரில் அழைக்காமல்  தாங்களாகவே  கட்டணத்தை இக் குழு நிர்ணயம் செய்யவேண்டும். மேலும் ஆன்லைன்    விண்ணப்பிக்கும்  புதுக்கோட்டை மாவட்டத்தில்  செயல்படாத பள்ளிகளின் பட்டியலை  உடனே  வெளியிட  வேண்டும்                                                                       

2020-21 -ஆண்டின்  ஆர்.டி.இ  சேர்க்கையில் கல்வி பயிலும்  மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் அரசு  நிர்ணயித்த  தொகையை 70% கட்டணத்தை  உடனே   வழங்க வேண்டும்.  ஏற்கெனவே அரசு அங்கீகாரத்துடன் செயல் படும் மெட்ரிக் மற்றும்  நர்சரி  பள்ளிகளின் கட்டிடங்களுக்கு டிடிசிபி  பெறுவதிலிருந்து விளக்களிக்க வேண்டும்.  தனியார் பள்ளி ஆசியர்களை  வருகின்ற  சட்டமன்ற தேர்தல் பணிகளில்  ஈடுபடுத்த ஆசிரியர்களை  கட்டாயப்படுத்தக்கூடாது.

நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை  உடனடியாக  நடுநிலைப்பள்ளியாக  தரம் உயர்த்தவேண்டும். பள்ளிகளின்  அங்கீகாரத்தை புதுப்பித்து  உடனுக்குடன் வழங்கிவரும்  முதன்மைகல்விஅலுவலர் புதுக்கோட்டை.அறந்தாங்கி.இலுப்பூர் மாவட்டக்கல்விஅலுவலர் உள்ளிட்ட கல்வி அலுவலர்களுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.து. 

. பள்ளிகள் திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறி முறைகள் பின் பற்றுவது தொடர்பாக நிர்வாகி பாண்டிசெல்வம்   எடுத்துரைத்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர  தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ரமணன் விளக்கிப் பேசினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களைச் சார்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். பொருளாளர் மேசியா சந்தோசம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குழிபிறை  ஸ்ரீ மீனாட்சி பள்ளி நிர்வாகி ராஜ் மற்றும் அற்புத அலெக்ஸாண்டர், கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர்.    


Top