logo
தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகி இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவிகி இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

04/Jan/2021 04:31:27

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் திரைப்படங்களையும், திரையரங்குகளையும் நம்பி பணியாற்றுவோரின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனா்.அதனை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்று 50 சதவிகித இருக்கைகளுடன் கடந்த 10-ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க திரையரங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. திரையரங்குகளில் 100  சதவிகிதப் பார்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.

திரையரங்குகளில் 100 சதவிகிதப் பார்வையாளா்களை அனுமதிக்க வேண்டும்  என நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார்.

100% பார்வையாளர்களுக்கு அனுமதி: திரையரங்குகளில் 50% பார்வையாளர்களிலிருந்து  100%  பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்து திரைப்படத்தை பார்க்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

திரையரங்குகளில் அரசு வலியுறுத்தியுள்ள கரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 100%  பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணை நகல்  பார்வைக்கு  தரப்பட்டுள்ளது.

Top