logo
சனிப்பெயர்ச்சி விழா: ஈரோடு மாவட்டத்திலுள்ள கோவில்களில்  சனீஸ்வர பகவானுக்கு  சிறப்பு அபிஷேகம்

சனிப்பெயர்ச்சி விழா: ஈரோடு மாவட்டத்திலுள்ள கோவில்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

28/Dec/2020 08:16:10

ஈரோடு டிச: சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரவேசிப்பார் அதன்படி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இன்று அதிகாலை 5.25 மணிக்கு பிரவேசித்தார். இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஈஸ்வரன் மற்றும் பல்வேறு கோயில்களில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஈரோடு  கோட்டை கோவில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு அதிகாலை மஞ்சள் சந்தனம் பால் தயிர் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது . ஈரோடு மாநகராட்சியில் உள்ள ராஜகணபதி கோவிலில் சனி பெயர்ச்சி சிறப்பு யாகம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியைகடைப்பிடித்து  வழிபட்டனர்.

 கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில்  அதிகாலை சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாடு நடந்தது இதேபோல்,  நாகேஸ்வரர் சாமி கோவில் மற்றும் கொடுமுடி சுற்றுவட்டார பகுதியில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும், கோபி, நம்பியூர், பெருந்துறை, சென்னிமலை, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர் மற்றும் மாவட்டத்தில் ஈஸ்வரன் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்

Top