logo
வாரணாசியிலிருந்து  கத்தார் நாட்டுக்கு அரிசி ஏற்றுமதி

வாரணாசியிலிருந்து கத்தார் நாட்டுக்கு அரிசி ஏற்றுமதி

22/Dec/2020 01:56:41

வாரணாசி: காசியிலிருந்து கத்தாருக்கு முதன்முறையாக விவசாயிகள் அரிசி ஏற்றுமதி செய்துள்ளனர்

வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020 விவசாயிகள் தங்கள் பொருட்களை உள்நாட்டு தேவை போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் ஊக்குவிப்பு மற்றும் வசதிகளை செய்து தருகிறது.

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மாநிலம் தாண்டி இந்தியா முழுக்க எந்த வியாபாரியிடமும் விற்றுக்கொள்ளலாம். உள் நாட்டில் தட்டுப்பாடு இல்லாத காலங்களில் அரசு அனுமத்தித்த அமைப்புகள் மூலம் ஏற்றுமதியும் செய்யலாம்.இதனால், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை, கூடுதல் லாபம் கொடுக்கும் வியாபாரியிடம் விற்று, லாபம் பார்க்க வழிவகை ஏற்படுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு அரிசி விளைச்சல் பெருமளவு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், அரிசி ஏற்றுமதிக்கு வாரணாசியில் அதிக வாய்ப்புகள் இருப்பதால், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், முன்னணி ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான சரக்கு தளத்தை ஏற்பாடு செய்திருந்தது.


குறிப்பாக வாரணாசியில் அதிக அளவில் கருப்பரிசி என்கிற ஒரு வகை அரிசிக்கு கத்தார் போன்ற நாடுகளில் நல்ல கிராக்கி உண்டு. ஆனால் சரியான சட்ட பாதுகாப்பு இல்லாததால் உடனுக்குடன் உள்ளூர் அமைப்புகளால் இது வரை வெளியே ஏற்றுமதி செய்ய முடியவில்லை. பல நபர்களிடம் கை மாறியே இந்த ரக அரிசி வெளிநாடுகளுக்கு சென்றது. இதனால் உள்ளூர் விவசாயிகள் குறைந்த விலைக்கே விற்று வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் ஓன்று சேர்ந்து தாங்கள் விளைவித்த அரிசியை அரசின் உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் உதவி மூலம் ஏற்றுமதிக்கு அனுப்பி வைத்தனர்.


2020 டிசம்பர் 16 அன்று வாரணாசியிலிருந்து முதன் முறையாக 520 மெட்ரிக் டன் அரிசியை கத்தாருக்கு ஏற்றிச்சென்ற வாகனத்தை அபெடா அமைப்பின் தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, வாரணாசி மண்டல ஆணையர் தீபக் அக்ரவால் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். எம். அங்கமுத்து, வாரணாசியிலிருந்து அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்ட அறிக்கையை அபெடா தயாரிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் இதற்கு வழி வகுத்துள்ளதாகவும், இதற்காக நன்றி கூறுவதாகவும் வாரணாசி விவசாய அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.


Top