logo
 உத்திரட்டாதி நட்சத்திர வழிபாட்டுத்தலமாகத்திகழும் .  தீயத்தூர் ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் ஆலயம்

உத்திரட்டாதி நட்சத்திர வழிபாட்டுத்தலமாகத்திகழும் . தீயத்தூர் ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் ஆலயம்

23/Sep/2020 07:13:01

ஒரு காலத்தில் முனிவர்களும் ரிஷிகளும் வசித்து வந்த தீயத்தூரில் ஹோமப் புகை வாசம் எப்போதும் கமழ்ந்து கொண்டே இருக்குமாம். செல்வ வளம் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் இங்கு குடி கொண்டுள்ள ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரரை வழிபட்டால் போதும்.  இது உத்திரட்டாதி நட்சத்திர ஸ்தலம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தத் தலத்தை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.            


புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தீயத்தூர் திருத்தலம் புராண காலத்தைச் சேர்ந்தது. இங்கு ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரருக்கும், ஸ்ரீ வாஞ்சா கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், அம்பாள் பிருஹன்நாயகி (பெரிய நாயகி) ஆகியோருக்கும் தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. அனைத்துச் சந்நிதிகளுமே விரிசல்களுடன் சிதைந்து பரிதாபமாகக் காணப் படுகின்றன. சந்நிதி விமானங்களில் செடிகள் வளர்ந்து பாழடைந்துள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் வரத்தும் குறைந்து காணப்படுகிறது ஆலயம். கோயிலைச் சுற்றி, ‘ப’ வடிவில் அமைந்துள்ள ஏரிப் பகுதியில், சிறப்பு வாய்ந்த ‘அக்னித் தாமரைகள்’ மலர்ந்த அக்னி தீர்த்தம் ஒரு காலத்தில் அமைந்திருந்ததாம்.நாம் செல்லும் வழியில், தீயத்தூரைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் தாமரை மலர்கள் நிறைந்துள்ளதைக் காண முடிந்தது. 

இது பற்றி ஊர்ப் பெரியவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘எங்க தாத்தா காலத்தில் அவர் சொன்ன சம்பவம் இது: அந்தக் காலத்தில் சித்த புருஷர்களும், முனிவர்களும் இங்கு வந்து தினசரி 1,000 தாமரை மலர்களால் சிவனை வழிபடுவார்களாம். யாகம் நடத்தி அதுல மலர்கள் போடுவாங்களாம். எனக்கு விவரம் தெரிஞ்சு எப்பவாவது ஒரு சிலர் வந்து அது போல செய்றதுண்டு. பக்கத்து ஊர்கள்ல எங்கயும் தாமரைப்பூ கிடைக்கலேன்னா தீயத்தூர்ல எப்பவும் கிடைக்கும். ஒருவேளை அதுதான் காரணமாக இருக்குமோ?’’ என நம்மிடம் திருப்பிக் கேட்டார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தீயத்தூரின் பெயரே, இந்தத் தலத்தின் பெருமையை விளக்குகிறது. தீ- அக்னி, அயன்- பிரம்மா, ஊர்- (ஊர்ந்து செல்பவனாகிய) சூரியன் என மூவரும் வழிபட்ட தலம் என்பதால் தீயத்தூர் ஆயிற்று. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து திருப்புனவாசல் செல்லும் பாதையில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தீயத்தூர். அறந்தாங்கியில் இருந்து திருப்புனவாசல் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் தீயத்தூர் வழியாகச் செல்கின்றன.


ஆலய ஈஸ்வரன் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர்; அம்பாள்:

 பிருஹன்நாயகி,ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் என்கிற பெயர் இந்த ஈஸ்வரனுக்கு எப்படி வந்தது?

 திருவீழிமிழலையில், திருமால் சிவபூஜை செய்தபோது, அர்ச்சனைக்கான 1,000 பூக்களில் ஒன்று குறைந்ததாம். இதைக் கண்ட திருமால், தம் ஒரு கண்ணை, குறைந்த அந்தப் பூவுக்குப் பதிலாக வைத்து பூஜித்தாராம். திருமால் பெற்ற இந்த தரிசனத்தைத் தானும் பெற திருமகள் விரும்பினாராம்.எனவே, சிவபெருமானைத் தரிசிக்க தவம் மேற்கொண்டார் லக்ஷ்மிதேவியாகிய திருமகள். தவம் செய்வதற்காகத் தகுந்த திருத்தலத்தைத் தேடி அவர் அலைந்தபோது தீர்த்தாண்டதானம் என்னுமிடத்தில் சிவ சகஸ்ரநாம பூஜையில் ஒப்பற்றவரான கார் ஜனீய மகரிஷியைச் சந்தித்து விளக்கம் கேட்டாராம். அந்த மஹரிஷியும், தானும் தவத் துக்குத் தகுந்த இடத்தைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினாராம். பின், அன்றைய அமாவாசை தீர்த்தவாரிக்கு அங்கு வந்திருந்த அகஸ்திய முனிவரை இருவரும் அணு கினர். அப்போது தீயத்தூரின் பெருமைகளைக் கூறிய அகஸ் தியர், ‘‘திருமாலின் திருமார்பில் தாங்கள் உறையும் பாக்கியம் பெற்றால், சிவ தரிசனங்கள் எல்லாவற்றையும் தரிசிக்கலாம்! மேலும் இந்தத் தலத்தின் இறைவனை 1,000 அக்னித் தாமரைகளால் அர்ச்சித்தால், சிவபெருமானின் தரிசனத்துடன் திருமாலின் திருமார்பில் உறையும் பாக்கியமும் ஏற்படும்!’’ என்று ஆலோசனை கூறினாராம்.


அதன்படி திருமகளும் கடுந்தவம் புரிந்து இந்தத் தலத்தின் அக்னித் தீர்த்தத்தில் மலர்ந்த 1,000 அக்னித் தாமரைகளைக் கொண்டு அர்ச் சனை செய்தாராம். அதனால் மனம் கனிந்த சிவபெருமான், ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரராக காட்சி அளித்தாராம். அதைத் தொடர்ந்து 1,000 திருமுகங்கள் கொண்ட சுந்தரராஜ பெருமாளும் திருமகளை தம் மார்பில் ஏற்றி வைத்துக் கொண்டாராம். இதனாலேயே இந்தத் தலத்து இறைவன் ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.


உலகின் அனைத்து வகையான ஹோமங்களுக்கும் அதிபதியாக விளங்கும் ஆங்கீரஸ மகரிஷி, முதன் முதலில் சூரியன்-சந்திரன்-அக்னி ஆகிய மூன்று அக்னிகளைக் கொண்டு ஹோமம் நிகழ்த்திய திருத்தலம் இந்த தீயத்தூர். உலகில் முதன் முதலாக சாம்பிராணி போட்டுப் புகை எழுப்பி வழிபடும் முறை உண்டான தலமும் இதுவே. இதனால் இன்றும் தீராத பணக் கஷ்டம் மற்றும் மனக் கஷ்டங்களுக்கு ஆளானவர்கள், தொடர்ந்து 3 மணி நேரம் சாம்பிராணி புகை இட்டு ஸ்ரீ சகஸ்ர லக்ஷ்மீஸ்வரரை வழிபட்டால் அனைத்துத் துயரங்களும் விலகும் என்பது ஐதீகம்.தட்சனது யாகத்தின்போது தமது அக்னி சக்தியை இழந்த அக்னி பகவான், பல தலங்களிலும் அலைந்து திரிந்த பின் இறுதியாக இங்கு வந்து தவம் புரிந்து சந்தனக் குழம்பின் நடுவே ஹோமம் வளர்த்து, தாம் இழந்த சக்திகளை மீண்டும் இங்குதான் பெற்றார் என்கிறார்கள். இன்றும் அந்த நம்பிக்கை இங்கு நிலவுகிறது. இப்போதும் பலர் தம் கைகளால் அரைத்த சந்தனத்தை சிவனுக்குப் பூசி, அர்ச்சித்து, தாம் இழந்த பல நன்மைகளை மீண்டும் பெறுவதற்கு இந்தத் திருத்தலத்துக்கு வருகின்றனர்.


ஆதியில் ஐந்து சிரங்களுடன் விளங்கிய பிரம்மா, தாமே பெரியவர் என அகந்தையுடன் திகழ்ந்தாராம். அவரது அகந்தையை அடக்க சிவபெருமான் ஒரு தலையைக் கொய்துவிட, பிரம்மனின் ஐந்தாம் சிரசு இருந்த இடத்தில் தாங்கொணாத அக்னிக் குழம்பு ஏற்பட்டது. பின்னர் அகஸ்தியரின் ஆலோசனைப்படி இந்தத் தீயத்தூரில் அக்னி ஹோமங்கள் நிகழ்த்தி, தம் சிரசின் அக்னிச் சூட்டைத் தணித்துக் கொண்டாராம் பிரம்மாசூரிய பகவான், சம்க்ஞா தேவியை திருமணம் புரிந்த காலத்தில் அவரது வெப்பம் தாங்காமல், தனது சாயாதேவி என்னும் ரூபத்தை நிறுத்திவிட்டு, சம்க்ஞா தேவியாகி தவம் செய்யத் தீர்மானித்தாளாம். அவள் தீயத்தூர் வந்து கடுந்தவம் புரிந்து சூரியனின் வெப்பத்தைத் தாங்கும் வல்லமை பெற்றாள். இதற்கிடையில் சூரிய பகவான் சம்க்ஞா தேவிக்காக, விஸ்கர்மாவின் துணையுடன் தம் அக்னி சக்தியை சீர்திருத்திக் கொண்டாராம். இப்போது ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் அருளால் சூரியனின் அக்னியைத் தாங்கும் தேஜஸ் பெற்றார் சம்க்ஞா தேவி. அதனால் சூரிய தேவன் அவஸ்தைப்பட ஆரம்பித்தார். அதாவது, சம்க்ஞாதேவியின் புதுப் பிரகாசத்தைத் தாங்க இயலாத சூரியன், அகஸ்தியரை நாடி அவரிடம் ஆலோசனை கேட்டார். அவரது யோசனைப்படி, இங்கு வந்து இறைவனை பூஜித்து நிவர்த்தி பெற்றாராம்.


இவ்வாறு அக்னி- பிரம்மா- சூரியன் ஆகிய மூவரும் வழிபட்ட இந்த தீயத்தூர் திருத்தலத்தை தரிசித்து நாமும் நற்பலன்கள் அனைத்தையும் அடைவோம்திருமணத் தடை உள்ளவங்க, பிள்ளை இழந்த சோகத்துல இருக்கிறவங்க, பிள்ளைப் பேறு இல்லாதவங்களுக்கு ஒரு தாயைப் போல கருணை காட்டி ஆறுதல் அளிப்பவள் இந்த அம்பாள். இது உத்திரட்டாதி நட்சத்திர ஸ்தலம். உத்திரட்டாதி நட்சத்திரத் தில் பிறந்தவங்க தங்கள் வாழ்நாள்ல ஒரு முறையாவது இந்தத் தலத்தை தரிசிக்கணும். உத்தி ரட்டாதி நட்சத்திரத்தில் தோன்றிய ஆங்கீரஸ மகரிஷி, அகிர்புத்னிய மகரிஷி, விஸ்வகர்மா, அக்னிபுராந்தக மகரிஷி போன்றவர்கள் மாதந் தோறும் சூக்கும மற்றும் ஸ்தூல சரீரங்களோட வந்து வழிபடுற ஸ்தலம் இது.பூலோகத்திலேயே சிவபெருமான் சகஸ்ர லக்ஷ்மீஸ்வரர்னு நாமம் பெற்ற ஒரே தலம் இதுதான். நாலு வருஷத்துக்கு முன்னாடி ஜப்பானில் இருந்து ஒரு தம்பதி திடீர்னு இங்கே வந்தாங்க.


‘இது பூலோகத்தில் உள்ள உத்திரட்டாதி நட்சத்திர ஸ்தலம். நாங்க இறைவனை வழிபட வந்திருக்கோம்’னாங்க. ஜப்பான்ல இருக்கிற வங்களுக்கு இது எப்படி தெரியும்னு எனக்கு ஒரே ஆச்சரியம்! அவங்க வந்த அன்னிக்கு நல்ல மழை. சுற்றுப்புறங்களில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறிய தண்ணீரால் கோயிலுக்குப் போக முடியாத நிலையில்,  .

இவங்க, ‘இறைவனை தரிசிச்சே ஆகணும்னாங்க. சரின்னு ஒரு டிராக்டர புடிச்சு, அதுல ஏத்திகிட்டு வந்தோம். அன்னிக்கி 1,008 எலுமிச்சை விளக்கு, 1,008 அகல் விளக்கு போட்டு வழிபட்டாங்க. எங்கேயோ ஜப்பான்ல இருக்கிறவங்களுக்கு எப்படி இந்த தலத்தைப் பற்றி தெரிஞ்சதுனு புரியல’’ என்றார்.

ஆலயத்தின் விசேஷ காலங்கள்: பிரதோஷம், அமாவாசை, சங்கட ஹர சதுர்த்தி மற்றும் சிவராத்திரி. இங்கு ஈஸ்வரருக்கு மாத சிவராத்திரி பூஜையும் அம்பாளுக்கு பௌர் ணமி பூஜையும் விசேஷமானவை. இங்கு நடைபெறும் வழிபாடுகளில் இறைவனுக்கு சாம் பிராணிப் புகை, அர்ச்சனை, கையால் அரைத்த சந்தனக் குழம்பு அர்ச்சனை, 1,000 தாமரை மலர்களால் அர்ச்சனை ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

வருடத்துக்கு ஒரு முறை வரும் மகா சிவராத்திரியன்று அருகில் உள்ள பொன்பேத்தி கிராம சிவன் கோயிலில் இருந்து ஆண்களும், பெண்களும் கால் விரல்களில் மெட்டி அணிந்து கிளம்பி, இங்கு வந்து இரவு முழுவதும் சிவநாமம் ஜெபிக்கிறார்கள். அதற்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே மாலை அணிந்து விரதம் கடைப்பிடிக்கிறார்கள்.

                            கும்பாபிஷேகம்   30.10.2019   நடைபெற்றது   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சென்று, அங் கிருந்து திருப்புனவாசல் செல்லும் பேருந்தில் ஏறி, தீயத் தூரில் இறங்க வேண்டும். தீயத்தூர்- சொசைட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, வலப் புறமாக இரண்டு நிமிட நேரம் நடந்தால், ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரர் ஆலயம் வந்து விடும். 


                                                                               

        


Top