logo
பண்ணாரி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

20/Dec/2020 11:54:31

ஈரோடு: பண்ணாரி அம்மன் கோயிலில் சவுக்கு தடுப்பு வழியாக திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தமிழகம்-கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். கரானா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் முதல் பக்தர்கள் தரிசத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மைசூர், கோவை, ஈரோடு, நீலகிரி போன்ற இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் நீண்ட சவுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு அதன் வழியாக கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். 

கோயில் முன் உள்ள மரத்தில் பெண்கள் குழந்தை தொட்டில் கட்டி வணங்கினர். மதியம் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில் அம்மன் பர்தர்களுக்கு அருள்பாலித்தார். 

குழந்தைகளுக்கு நேர்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்திய பின்னர் அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதற்கு தனியாக சவுக்கு தடுப்பு வழியும் வெளியேறுவதற்கு மற்றொரு வழியும் ஏற்படுத்தப்பட்டது. 

பக்தர்கள் கூட்டம் அதிகரித்தையடுத்து கோயில் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.


Top