logo
எளிதான மருத்துவக் குறிப்புகள்.. மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?

எளிதான மருத்துவக் குறிப்புகள்.. மாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..?

18/Dec/2020 06:39:16

குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு, அடுத்து, நம் வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து, குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை படுவர். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால், விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன என்பதை பார்ப்போம்.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டை யிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளை அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும்.

இது நடப்பதற்கு குறைந்தது 3 முதல் 5 நாட்களாகும்.இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வு களை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்துப் போரிடாமல் சோம்பேறியாகி விடும்.  நமது உடல் எல்லா வித  வியாதிக்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்த வரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

குறிப்புகள் : கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.பசும் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.            

சின்ன சின்ன இருமல், தலைவலி, ஜலதோஷத்திற்காக எல்லாம் டாக்டரிடம் ஓடாதீர்கள்.மிளகு, உப்பு, தேன், கற்பூரவள்ளி, வெற்றிலை, அன்னாசி, ஆரஞ்சு ஜூஸ், சின்ன வெங்காயம் சாப்பிட்டால்,  நம்மைக் கண்டு கொரோனாவும் கூட அஞ்சி ஓடும்.

       

Top