logo
ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா  கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

06/Dec/2020 08:38:40

ஈரோடு, டிச: ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து வழிபாடுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தமிழக அரசு தளர்வுகள் அளித்ததை தொடர்ந்து வாரத்தில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினசரி திருப்பலிகள் நடந்து வந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி உள்ளிட்ட எந்த வழிபாட்டு நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

 ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதிகள் காரணமாக திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் நீடித்து வந்தது. இந்தநிலையில், வழிபாட்டு தலங்களுக்கான விதிகளை தமிழக அரசு தளர்த்தி அறிவித்தது. 

அதைத்தொடர்ந்து ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மற்றும் வழிபாடுகளை நடத்தவும், இந்த ஆண்டு தேர்த்திருவிழாவை சிறப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10.30 மணிக்கு திருப்பலி வழிபாடுகள் நடந்தது.அதைத் தொடர்ந்து அதுமட்டுமின்றி, புனித அமல அன்னையின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

 தொடர்ந்து வார நாட்களில் வழக்கம்போல காலை மற்றும் மாலையில் திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும். 13-ஆம்  தேதி தேர்த்திருவிழா, வீதி ஊர்வலம் இன்றி வேண்டுதல் தேர் ஊர்வலத்துடன் நடைபெறும். ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்படும்போது பக்தர்கள் உடன் சுற்றி வர அனுமதி இல்லை. 4 திருப்பலிகளிலும் இந்த வேண்டுதல் தேர் இழுக்கப்படும்.

இந்த விழாக்கள் மற்றும் தொடர்ந்து நடைபெறும் அனைத்து ஞாயிற்றுக்கிழமை திருப்பலி வழிபாடுகளிலும் பக்தர்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

Top