06/Dec/2020 02:11:46
சென்னை: 2020-ஆம் ஆண்டிற்கான பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள The Caste Less Collective இசைக்குழுவைச் சேர்ந்த இசைவாணியை இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா. ரஞ்சித் The Caste Less Collective என்ற இசைக்குழுவை நடத்தி வருகிறார். சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள் இருக்கும் அந்த இசைக் குழுவில் இசைவாணி ஒருவர் மட்டுமே பெண். சமூக அக்கறை கொண்டு செயல்படும் இந்தக் குழு சமத்துவத்தை முன் வைத்து மேடைதோறும் பாடல்களைப் பாடிவருகின்றனர்.
இந்நிலையில், பிபிசி பத்திரிகையின் 2020-ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த 100 பெண்கள் பட்டியலில் caste less collective இசைக்குழுவைச் சேர்ந்த இசைவாணி இடம்பிடித்துள்ளார். பலரும் இசைவாணியை வாழ்த்திவரும் நிலையில் இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் பா. ரஞ்சித் தனது முகநூல் பக்கத்தில், இசைஞானியிடம் வாழ்த்துப்பெற்ற இசைவாணி.. நமது தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் பாடகி இசைவாணியை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். பெருமகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.