logo
இரும்பு பெண்மணி ஜெயலலிதா  4 -ஆம் ஆண்டு நினைவு தினம் (டிசம்பர் 5) இன்று ..

இரும்பு பெண்மணி ஜெயலலிதா 4 -ஆம் ஆண்டு நினைவு தினம் (டிசம்பர் 5) இன்று ..

04/Dec/2020 08:42:56

 2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38-இல் வெற்றி பெற்று சாதனை படைத்த இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தார் ஜெயலலிதா. உடல் நலக்குறைவால் 2016-ஆம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார். இவரின், மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பிரபலமான ஜெயலலிதா, மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார். இதில், எம்.ஜி.ஆர்-வுடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார்.திரைப்படங்களில் கோலோச்சிய ஜெயலலிதா 1982-இல் அரசியலில் தடம் பதித்தார். இதையடுத்து, 1983-இல் அவரை அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர். 1984-இல் மாநிலங்களவைக்கு தேர்வானதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

பின்னர், 1989 சட்டப் பேரவை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.எல்.ஏ- ஆனார். அத்துடன், தமிழக சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். இதையடுத்து, 1991-இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.

முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொந்து குவித்ததாக கூறி, 1996 ஜூன் 14-இல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதுவே, அவரின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் சறுக்கலையும், சிக்கலையும் ஏற்படுத்தியது. இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்கினார். 2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38-இல் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டது.

மேலும், 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று, தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைத்தது. அத்துடன், 6-ஆவது முறை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார் ஜெயலலிதா.உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23-ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், 74 நாட்கள் தொடர்ந்து உயர் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ஆம் தேதி தனது 68-வது வயதில் ஜெயலலிதா மரணமடைந்தார்.

இந்நிலையில், இவரின் 4 -ஆம் ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது.2016 -ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவும், மருத்துவ சிகிச்சைகளும்: ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவு 2016-ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.

மறைவு:  ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.  மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள அவரின் வேத நிலையம் இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. 

அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜியின் இறுதி அஞ்சலிக்குப்பின் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு மாலை 6.10 மணிக்கு ஆளுநரின் மரியாதைக்குப் பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்தனர்.

கட்சித் தொண்டர்கள் உயிரிழப்பு: ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் , அதிர்ச்சியிலிருந்து மீளமுடியா தொண்டர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக்கொண்டார். அவருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்குவதாகவும் அஇஅதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.


Top