logo
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

27/Nov/2020 04:04:11

ஈரோடு: அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மறைமுகமாக பாடம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.

 ஈரோடு மாவட்டம், கோபி சட்டமன்ற தொகுதிக்குளபட்ட கொளப்பலூர் பஞ்சாயத்து அலுவலகத்தை இன்று(நவ.27) அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர் கூறியதாவது:  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து தகவல் தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஏற்கனவே ஐஏஎஸ் ஐபிஎஸ் சர்வீஸ் சென்டர் செயல்படுகிறது நடப்பாண்டு மட்டும் 32 மாவட்ட நூலகங்களுக்கு  ரூ.1.12 கோடி மதிப்பிலான புத்தகங்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் படிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்து 480 மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தற்போது அரசு பள்ளி ஆசிரியர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

 அரசு பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு பயிற்சி அளிப்பது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும் ஆன்லைன் மூலமும் பாடம் நடத்தப்படுகிறது ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களது சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை விளக்கம் அளித்து வருகின்றனர் தற்பொழுது பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு மாநில முதல் நடைபெற்று வருகிறது அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அவரவர் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 அதன் அடிப்படையில் தற்போதும் இந்த ஆய்வு நடைபெற்று பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இவர் புயல் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. இதை அனைத்து பத்திரிகைகளும் பாராட்டியுள்ளன. முதலமைச்சரும் நேரடியாக செம்பரம்பாக்கம் மற்றும் கடலோர பகுதிகளுக்கு சென்று புயல் நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டதை அனைவரும் பாராட்டுகின்றனர்.

 தற்போது, மொடச்சூர் அதைச் சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ. 6.75 கோடி மதிப்பில் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள இந்திரா நகர் குளத்தில் வரும் டிசம்பர் 20 -க்குள் குழந்தைகள் படகு சவாரி செய்ய இரண்டு படகுகள் வாங்கப்பட்டுள்ளன அங்குள்ள பூங்காவும் திறந்து வைக்கப்பட்டு இப்பகுதி மக்களுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு தலமாக அது திகழும் என்றார் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

இதில், மாவட்ட திட்ட அலுவலர் பாலகணேஷ், கோபி ஆர்டிஓ ஜெயராமன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்ரமணியம், ஊராட்சி ஒன்றிய தலைவர் மோதீஸ்வரன், கோபி நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துராமன், கோபி நகர செயலாளர் காளியப்பன், கோபி தாசில்தார் தியாகராஜன், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர் அகமது உட்பட பலர் கலந்து கொண்டனர் 


Top