logo
மேலத்திருமணஞ்சேரி அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்...,

மேலத்திருமணஞ்சேரி அருள்மிகு ஐராவதேஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள்...,

23/Nov/2020 05:55:15

பொறுமை, தன்னம்பிக்கை, விடா முயற்சி, மன உறுதி, அர்ப்பணிப்பு இந்த ஐந்து குணங்களையும் தன்னிடத்தே கொண்டவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் தாங்கள் விரும்பியதை அடைந்து வெற்றி கொடியை நாட்டுவார்கள். இவைகளை தங்களுக்கு அருள் தந்திட வேண்டும் என்று வணங்கும் இடம் கோவில்கள் தான்.

அம்பாளை தன் மகளாக பாவிக்கும் கோவில் அர்ச்சகர் சிவனைத் தன் மகனாகக் கருதி, திருமணம் செய்து வைத்து சீர் வழங்கும் பழக்கம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள எதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ளது. வேண்டியவர்களுக்குத் திருமண வரம் தரும் திருமணஞ்சேரி அருகில் இருப்பதால் இந்த உரை மேலத் திருமணஞ்சேரி என்று கூறுகின்றார்கள்.

பரத்வாஜ மகரிஷி தனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதிதேவி மகளாக பிறந்தாள். மணப்பருவம் அடைந்தபோது சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி.

சிவனும் அம்பிகையே மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது கலாச்சாரம். மாப்பிள்ளையாக கடைசி வரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதை ஏற்ற சிவன் பரத்வாஜரின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.

பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் இந்த ஊருக்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர்கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டாயிற்று. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை இந்த சிவனை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் சூட்டப்பட்டது.

இந்தக் கோவிலில் பிரம்மோற்சவம் கிடையாது. இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமண தலமான திருமணஞ்சேரியில் அருள்பாலிக்கும் கல்யாண சுந்தரருக்கு சித்திரை மாதத்தில் கல்யாணம் நடக்கும்.

மாப்பிள்ளைக் கோலத்தில் அவர் எதிர்கொள்பாடி கோவிலுக்கும் எழுந்து அருளுவார். அந்தக் கோவிலில் அர்ச்சகர் தந்தை, தாய்–தந்தை பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார்கள். சீர் தருவார். இந்த உபசரிப்பை ஏற்று திருமணஞ்சேரி சென்று அம்பிகையைத் திருமணம் செய்து கொள்வார்.

பெரும்பாலான கோயில்கள் கிழக்கு நோக்கி இருப்பது வழக்கம். இங்கு சிவபெருமான் மேற்கு நோக்கி காட்சி தருவது விசேஷம். இத்தலத்து அம்பாள் மலர்க்குழல் நாயகி பெருங்கருணை பிராட்டியார் என்ற பெயரும் உண்டு.

நீண்ட நாட்களாக வரன் அமையாமல் இருப்போருக்கு அதே போல் என்பதால் அவளுக்கு இந்த பெயர் ஏற்பட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் வரன் பார்க்கும் முன் நல்ல மாப்பிள்ளை அமைய மகளையும் அழைத்து வருகின்றனர். சிவனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்கின்றனர்.

மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இந்தப் பூஜை நடத்தி தீர்வு கேட்கின்றனர். பரத்வாஜ முனிவர் வழிபட்ட ஆத்மலிங்கம் பிரகாரத்தில் உள்ளது. தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர் மற்றும் துணை வந்த விநாயகர் சன்னதிகளும் உள்ளன.

இங்கு முக்கிய விழாக்களாக பிரதோஷம், சிவராத்திரி, சோமவார பூஜைகள், மற்ற அனைத்து விஷேச நாட்களிலும் தமிழ், ஆங்கில புத்தாண்டுகளிலும் சிறப்பு பூஜைகள் உண்டு. தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படுகிற. தினமும் நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் மேலத்திருமணஞ்சேரி (வழி) குற்றாலம், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம் – 609 813, தொலைபேசி எண் : 04364 235487. கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் திருமணஞ்சேரியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.


 


Top