logo
காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் பலியான  ராணுவ வீரர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. நிதியுதவி

காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. நிதியுதவி

21/Nov/2020 08:50:04

தூத்துக்குடி:  கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி (34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் நாயக் பதவி வகித்து வந்துள்ளார். காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.

இறந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா (7), வைஷ்ணவி (5) என்ற இரு மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர். கருப்பசாமியின் மறைவு குறித்து அறிந்ததும் தெற்கு திட்டக்குளம் சண்காபுரத்திலுள்ள அவரது வீட்டிற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலையில் சென்று தனது சொந்தப் பொருப்பில்  ரூ.5 லட்சத்தை  கருப்பசாமி குடும்பத்திற்கு வழங்கினார்.  குழந்தைகளின் கல்வி செலவும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் கருப்பசாமியின் மனைவியின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க முதல்வரிடம் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதைப் போல், திமுக., மகளிர் அணி மாநில செயலாளரும், துாத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி., தி.மு.க., எம்.எல்.ஏ.,கீதாஜீவன் ஆகியோரும் கருப்பசாமி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், கருப்பசாமி குடும்பத்திற்க்குரூ.2 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.கருப்பசாமி குழந்தைகளின் கல்விச் செலவை தி.மு.க., ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார் அவர்.


Top