logo
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிக்கு செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு பணி தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிக்கு செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு பணி தொடங்கியது

21/Nov/2020 06:50:39

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ,இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 வயது முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளிக்கூடங்களில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அரசின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

 அதன் பொருட்டு, பள்ளிக்கூடம் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது. இந்த பணி ஏற்கனவே ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற வேண்டியுள்ளது. கோரணா காலகட்டம் என்பதால் தள்ளி வைக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இந்த பணி இன்று தொடங்கியுள்ளது. மேலும் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லாத, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை துல்லியமாக கண்டறியும் விதமாக இந்த களப்பணிநடைபெற்று வருகிறது.

இந்த கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும் குழந்தைகளில் 6 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் உரிய வகுப்புகளில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பள்ளிக்கூடம் செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணியினை மேற் கொண்டு வருகின்றனர்.

மேலும், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்குவாரி, மணல் குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயப்பணி போன்ற இடங்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தம் காரணமாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளை பல்துறையினருடன் இணைந்து கூட்டாய்வு மூலம் கண்டறியப்பட உள்ளது.  களப்பணியாளர்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா வைரஸ் நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


Top