logo
திண்டல் முருகன் கோவிலில் எளிமையாக  நடந்த திருக்கல்யாணம்

திண்டல் முருகன் கோவிலில் எளிமையாக நடந்த திருக்கல்யாணம்

21/Nov/2020 06:37:39

ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தேவயானைக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா நேற்று நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சூரனை முருகன் வதம் செய்தார்.

அதைத்தொடர்ந்து இன்று காலை முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வயானையுடன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.இதில் முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்தத் திருக்கல்யாண நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் முருகனை வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக திருக்கல்யாணத்தை யொட்டி திருமணச் சடங்குகள் யாகசாலை பூஜை, போன்ற  நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் 


Top