logo
ஆதரவற்ற பெண்ணின் குழந்தைக்கு பெயர் சூட்டிய எஸ்.பி

ஆதரவற்ற பெண்ணின் குழந்தைக்கு பெயர் சூட்டிய எஸ்.பி

15/May/2020 12:03:08

புதுக்கோட்டையில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பெயர் சூட்டி பரிசுகள் வழங்கினார்.

 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் ஆதரவின்றி சுற்றிந்திரிந்த ஈரோடு மாவட்டத்தைச்சார்ந்த கர்ப்பிணிப்பெண் சாவித்திரியை புதுக்கோட்டை துணைவன் அமைப்பினர் மீட்டு குழந்தைகள் மற்றும் பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துனர். தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் வழிகாட்டுதலின் படி தொண்டு நிறுவன இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு மார்ச்.23-ம் தேதி தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்ததது.

 கொரோனா ஊரடங்கால் தாய் மற்றும் குழந்தையை புதுக்கோட்டை துணைவன் அமைப்பினர்  பராமரித்து வந்தனர்.

 இந்நிலையில், துணைவன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரை சந்தித்து குழந்தைக்கு பெயர் சூட்ட கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, அந்த குழந்தைக்கு காவல்கண்காணிப்பாளர் அருண்சக்திருமார் எஸ்.எஸ்.ஸ்ரீபதி என பெயர் சூட்டி பரிசுகள் வழங்கினார்.

  நிகழ்வில் புதுகை செல்வா, முத்துராமலிங்கம், கந்தசாமி, ஜான்சிராணி, விஜயமணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

Top