logo
தீபாவளி திருநாள்: புதுக்கோட்டையிலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு

தீபாவளி திருநாள்: புதுக்கோட்டையிலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு

14/Nov/2020 07:10:38

தீபாவளி திருநாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தீபாவளித் திருநாளன்று பொது மக்கள் தங்களது இல்லத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் குளியல் செய்து, புத்தாடைகள் அணிந்து, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு பட்டாசுகளை வெடித்து, உற்றார் உறவினர்களுக்கும்  இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் பெரியோர்களுக்கு  பரிசுகளையும் தந்து வணங்கி வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.

தீபாவளி திருநாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில், குமரமலை தெண்டாயுதபாணி திருக்கோவில்,திருக்கோகர்ணம் ஸ்ரீபிரகதம்பாள் திருக்கோவில், பெரம்பூர் வீரம்மாகாளியம்மன் திருக்கோவில்.

புதுக்கோட்டை நகரில் மேலராஜ வீதியில் உள்ள  அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோவில், சாந்தநாதர் சுவாமி   திருக்கோவில் திருவப்பூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள்  நடைபெற்று உற்சவர்களுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு  தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து   தங்களது  குடும்பத்துடன்  வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

Top