logo
தமிழகத்தில் 7 மாவட்ட  கலெக்டர்கள்   இடமாற்றம்

தமிழகத்தில் 7 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

13/Nov/2020 07:33:51

சென்னை: இதுகுறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு மீன்வள கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் மீன்வள இயக்குனர் எஸ்.சமீரான், தென்காசி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனர் (பொறுப்பு) வி.விஷ்ணு, நெல்லை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்) பி.மதுசூதன் ரெட்டி, சிவகங்கை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மற்றும் மறுவாழ்வு துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். 

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.தேசிய சுகாதார திட்ட இயக்குனரும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவருமான கே.செந்தில்ராஜ் (படம்) ,  தூத்துக்குடி மாவட்ட கலெக்டரானார். சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன், மீன்வள இயக்குனர் மற்றும் தமிழ்நாடு மீன்வளக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கே.வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்ட கலெக்டர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, குறைகள் தீர்ப்பு பிரிவு, மின் ஆளுமை சிறப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். வெளிமாநிலத்தில் பணியாற்றி விட்டு சொந்த மாநிலத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் ஜெசிந்தா லாசரஸ், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மற்றும் மறுவாழ்வு துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்ய தர்ஷினி, பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனராக (சுகாதாரம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Top