logo
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்..தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்..தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்

11/Nov/2020 06:00:06

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட நபர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. 

சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில பொதுச் செயலாளர் ஜெய ராஜ ராஜேஸ்வரன் அளித்த பேட்டி:

புதிய ஓய்வுதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் 2019 ஆண்டில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்திலே அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். 

மேலும், வருவாய் கிராம உதவியாளர்கள் சத்துணவு பணியாளர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும் பணியாளர்களை காலமுறை ஊதியம் பயன்பெறும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வருட காலமாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

தமிழக அரசு உடனடியாக எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் டிசம்பர் 12-ஆம் தேதி மதுரையில் நடக்கும் மாநாட்டில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் என கூறினார் .


Top