logo
சூரம்பட்டி சிறப்பு மனுநீதி திட்ட முகாமில் 150 பேர் மனு அளிப்பு: எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சூரம்பட்டி சிறப்பு மனுநீதி திட்ட முகாமில் 150 பேர் மனு அளிப்பு: எம்.எல்.ஏ.க்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

04/Nov/2020 05:55:59

ஈரோடு கிழக்கு,மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மனுநீதி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில்  நடத்தப்படும் முகாம்களில் எம்.எல்.ஏ.க்கள்   கே.வி. ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு அகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட சூரம்பட்டி மண்டல அலுவலக வளாகத்தில் இன்று  மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே .எஸ்.தென்னரசு ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம்  மனுக்களைப்பெற்றனர்.

 இந்த முகாமில் 150 மனுக்கள் பெறப்பட்டன. 9 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையும், 30 நபர்களுக்கு இலவச வேட்டி சேலைகளும், தோட்டக்கலை வேளாண் துறை சார்பில் தலா ஒரு நபர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. 

இதில், மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன்,முன்னாள் துணை மேயர் கே சி பழனிச்சாமி, பெரியார் நகர் மனோகரன்,  ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், தாசில்தார் பரிமளாதேவி மற்றும் அதிமுக பகுதி செயலாளர்கள் மனோகரன், பழனிச்சாமி, கேசவமூர்த்தி, ஜெகதீஸ்,தங்கமுத்து, கோவிந்தராஜ், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம், மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால், ஆவின் துணை தலைவர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top