logo

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை கூடாது: உயர் நீதிமன்றம் கருத்து

03/Nov/2020 09:12:55

மதுரை: லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன், தூக்கு தண்டனை கூடாது  என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், லஞ்சம் புற்றுநோயை விட கொடிய நோயாக பரவி வருகிறது. என்றும் கூறியுள்ளனர். 

 நெல் கொள்முதல் வழக்கு தொடர்பாக சென்னை சூரிய பிரகாசம் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.மேலும், விவசாயிகள் இரவு பகல் பாராது பாம்பு கடி போன்ற வேதனைகளை சுமந்து  விவசாயம் செய்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்லை, வாங்காமல், விவசாயிகளிடம் லஞ்சம் பெற்று வருவது பிச்சைக்கு சமம்.

மேலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன், தூக்கு தண்டனை கூடாது. லஞ்சம் புற்றுநோயை விட கொடிய நோயாக பரவி வருகிறது. என்றும்  உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவில் முறைகேடுகள் நடைபெறவில்லை எனவும், ஆனால் 105 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு நடைபெறவில்லை என்றால் ஏன்  105 பேர் மீது  நடவடிக்கை.

இது போன்று தவறாக தகவல் அளித்தால், தகவல் அளிப்பவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் 105 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு அறிக்கையை ஏற்க முடியாது.

105 பேரிடமிருந்து எவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. விவசாயம் நமது நாட்டில் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்து நவம்பர் 9-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. 

                                                                               

        


Top