logo
மே.31-வரை குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தலாம்: ஆட்சியர்.

மே.31-வரை குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தலாம்: ஆட்சியர்.

30/Apr/2020 06:35:32

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆலங்குடி,இலுப்பூர் பகுதியில் உள்ள குளிர்பதன கிடங்குகளில் விவசாயிகள்  மே.31-ஆம் தேதி வரை விளைபொருட்களை இலவசமாக வைத்துக்கொள்ளலாம் என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 கரோனா  தொற்று தாக்குதலில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுபுதுக்கோட்டை விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் தங்களது  விளைபொருட்களை குளிர்பதனக் கிடங்கில் 31.5.2020 வரை பயன்பாட்டு கட்டணம் இன்றி இலவசமாக இருப்பு வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

                பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும் அவற்றை பாதுகாத்து தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு இயங்கி வருகின்றது.

 தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகள் தங்களின்  விளைபொருட்களான மிளகாய், மஞ்சள், புளி, பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை சேதமில்லாமல் குளிர்பதனக் கிடங்கில் இருப்பு வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிகம் லாபம் பெறும் வகையில் குளிர்பதனக்கிடங்கிற்கு  31.5.2020 வரை வாடகை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இருப்பு வைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.  

மேலும், இதுகுறித்த சந்தேகங்களுக்கு ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பொறுப்பாளர்-  9626514591 என்ற அலைபேசி எண்ணிலும், ஆலங்குடி வேளாண்மை அலுவலர் ( வேளாண் வணிகம்)  8825800829 என்ற  எண்ணிலும், இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பொறுப்பாளர்-  7010845373 என்ற  எண்ணிலும், புதுக்கோட்டை வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) 8072760544 என்ற  எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

 

 

Top