02/Nov/2020 08:45:16
ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையினால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் ஆகிய இரு மழைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு செல்ல போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை வாழ் மக்கள் கிராமத்திற்கு செல்லும் சாலையை புதுப்பித்து பாலம் அமைக்கவேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளைம் அருகே உள்ள கவுந்தப்பாடி முதல் நிலை ஊராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையை உருவாக்கும் மையம் கோபிசெட்;டிபாளையம் - ஈரோடு பிரதான சாலை பகுதியில் அரசு சர்க்கரை குடோனுக்கும் தனியார் பள்ளியின் பின்பகுதிக்கும் இடையில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இவ்விடத்தில் தினமும் கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கும் குப்பைகளுடன் மருத்துக்கழிவுகளையும் திடலில் கொட்டுவதுடன் அருகில் உள்ள விவசாய பூமிக்கு செல்லும் வழியிலும் கொட்டிவிடுகின்றனர். குப்பையை எருவாக்கும் மையத்திலிருந்து நமது அரசினால் முற்றிலும் ஒழிக்க நவடிக்கை எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் காகிதங்கள் அனைத்தும் காற்றினால் பறந்து வந்து விவசாய பூமியின் மண் வளத்தை பாதிப்பதாகவும் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், குப்பையை சேகரம் செய்யும் பணியாளர்களும் குப்பையை எருவாக்கும் மையத்தில் மக்கும் குப்பை மக்கா குப்பைகளை தரம் பிரித்து எருவாக்காமல் சேகரித்த குப்பைகளை கொட்டி தீவைத்து செல்வதாகவும் இதனால் காற்று மாசடைந்துள்ளதாகவும் சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இப்பகுதியில் குடியிருக்க சிரமாக உள்ளதாக பலமுறை இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திமுக நல்லசிவம் தலைமையில் திமுகவினர் அந்த இடத்ததை பார்வையிட்டு ஆய்வு செய்து திடக்கழிவு மேலாண்மை முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக்கழிவுகளை தீயிட்டு எரிப்பதற்குக்கும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இக்குப்பை கிடங்ககை முறையாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சுகாதார முறையில் செயல்படுத்த வேண்டும் என்று கவுந்தப்பாடி ஊராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.