logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் 333 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 333 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கல்.

31/Oct/2020 06:23:29

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தலைமையில் இன்று(31.10.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  டாக்டர் சி.விஜயபாஸ்கர் 333 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: பொது மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தைச் சேர்ந்த 149 பயனாளிகளுக்கு ரூ.18.77 லட்சம் மதிப்பீட்டிலும், 22 பயனாளிகளுக்கு ரூ.1.18 லட்சம் மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகளும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.2 லட்சமும், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஒரு உழவர் உற்பத்தியாளர் அமைப்பிற்கு ரூ.10 லட்சமும், 29 உழவர்  உற்பத்தியாளர்  குழுக்களுக்கு ரூ.43.50 லட்சமும், புலம்பெயர்ந்த இளைஞர்கள் 99 நபர்களுக்கு ரூ.99 லட்சமும் என மொத்தம் 333 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். 

இதில்,தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ  பா.ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் த.ஜெயலெட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர்  தமிழ்ச்செல்வன், ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Top