logo
ஈரோட்டில் கருப்பு துணியால் கண்களை கட்டி, தராசு ஏந்தி பெண்கள் நீதி கேட்டு போராட்டம்.

ஈரோட்டில் கருப்பு துணியால் கண்களை கட்டி, தராசு ஏந்தி பெண்கள் நீதி கேட்டு போராட்டம்.

09/Oct/2020 10:58:50

உத்தபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்முறை  செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் பெண் மணிஷா மரணத்திற்கு நீதி கேட்டு கருப்பு துணியால் கண்களை கட்டி  தராசு ஏந்தி நீதி கேட்டு  ஈரோட்டில்  அருந்தததியர் இளைஞர் பேரவை தலைவர்  வடிவேல்ராமன் தலைமையில் இன்று(9-10-2020)  போராட்டம் நடைபெற்றது. 

கோரிக்கைகள்: புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெண்கள் வன்கொடுமைகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய ஊரக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டும்,  தந்தை பெரியார் சிலைக்கு கடலூர் மாவட்டத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்களின் பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்ட்ம் நடைபெற்றது.


இதில்,  ஜனநாயக மக்கள் இயக்க பொதுசெயலாளர் ஜெகஜீவன்ராம், மாநில துணைத்தலைவர் எம்.கே.ஆறுமுகம்,  தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் வி.எஸ்.சண்முகம், மாவட்ட செயலாளர் குப்புசாமி,  திராவிடர் பேரவை தலைவர்  பொன் சுந்தரம்,  தமிழ் புலிகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர்  மாசிலாமணி,  இந்திய கண சங்கம் கட்சி துணை பொது செயலாளர்தமிழ் சாக்கியன், விடுதலை வேங்கைகள் கட்சி மாவட்ட செயலாளர்  என்.கே.துரைசாமி, மாவீரன் பொல்லான் பேரவை மாவட்ட தலைவர் மாணிக்கம்,  மாவட்ட செயலாளர் வெ.ஆறுமுகம், முருகேசன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


Top