logo
3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக்  கண்டித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு காத்திருப்பு போராட்டம்

3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு காத்திருப்பு போராட்டம்

29/Jun/2021 10:05:13

புதுக்கோட்டை, ஜூன்: ஒப்பந்த பணியாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காத புதுகை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து  (DTUC)  ஜனநாயக தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்சங்கத்தலைவர் .சி.விடுதலைக்குமரன் தலைமையில் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கிய காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக  ஜனநாயக தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தலைவர் .சி.விடுதலைக்குமரன் கூறியதாவது:

புதுக்கோட்டை நகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக  ஊதியம் வழங்கப்படவில்லை. மூன்றாவது மாதமும் முடிவடையும் வரை ஊதியம் வழங்கப்படவில்லை.  அதேபோன்று முன் களப் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை அன்றாடம் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு மாஸ்க், கை உறை, காலணி மற்றும் இரண்டு சீருடைகள் இதுவரை வழங்கப்படவில்லை.மேலும் தூய்மை பணியில் ஈடுபடுத்த உள்ள கருவிகளும் எதுவும் வழங்கப்படவில்லை

இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி DTUC தலைமையிலான ஜனநாயக தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லைஅதனால் 25.6.2021 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுவின் நகலை கொடுத்து முறையீடு செய்தோம். ஏற்கெனவே கொடுத்த மனு தொடர்பாக  நகராட்சி ஆணையரிடம் பேசியுள்ளதாகவும்  உடனடியாக  ஊதியம் வழங்கப்படும்  என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆனால்ஒரு வாரம் கடந்து விட்டது. இன்று வரை  ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார்  நிர்வாகத்தால் ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த மூன்று மாத காலமாக ஊதியமின்றி  வேறு எந்த வருமானமுமின்றி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் சுமார் 200 பேர்  பசி பட்டினியோடு  பணியாற்றி போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என வீட்டில் உள்ளவர்களை கவனிக்க இயலாமல், உணவு கொடுக்க முடியாமல், தாங்கள் ஒரு டீ குடிப்பதற்கு செலவழிக்க கூட   யோசனை செய்யும் நிலைக்கு இந்தத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்

ஆனால், இதுபற்றியெல்லாம் நகராட்சி நிர்வாகமும்  ஒப்பந்ததாரரும் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே, தாமதமின்றி உடனடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி  திங்கள்கிழமை காலையிலிருந்கு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் யாரும் வேலைக்கு செல்வதில்லை என்று முடிவு செய்து காலை ஐந்தரை மணி முதல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் வரையில் இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றார் விடுதலைக்குமரன்.

இந்தப்போராட்டம் காரணமாக நகராட்சி பகுதியில் துப்புரவுப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் தலையிட்டு  ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Top