logo
 ஸ்கிரீனிங் மையத்திலிருந்து கொரோனா நோயாளிகளை  மருத்துவமனைத்து அழைத்துச் செல்ல மாநகராட்சி சார்பில்  பேருந்து வசதி

ஸ்கிரீனிங் மையத்திலிருந்து கொரோனா நோயாளிகளை மருத்துவமனைத்து அழைத்துச் செல்ல மாநகராட்சி சார்பில் பேருந்து வசதி

17/May/2021 12:32:33

ஈரோடு, மே:  ஈரோட்டில் ஸ்கிரீனிங் மையத்திலிருந்து கொரோனா நோயாளிகளை  மருத்துவமனைத்து அழைத்துச் செல்ல மாநகராட்சி சார்பில்  பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதை வீட்டுவசதித்துறை  அமைச்சர் சு. முத்துசாமி, ஆட்சியர் சி. கதிரவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு உடனுக்குடன் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு  பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஸ்கிரீனிங் மையத்துக்கு வரவழைக்கப்படுகிறார்கள்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தொற்று அதிகமாக உள்ளவர்கள் மருத்துவமனைக்கும்  குறைவாக உள்ளவர்கள் வீட்டு தனிமை மற்றும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.இந்நிலை யில் வீடுகளில் இருந்து ஸ்கிரீனிங் மையத்துக்கு செல்பவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி குறைவாக உள்ளதால், தங்களது சொந்த வாகனங்களில் சென்று வருகிறார்கள். இதற்காக  தன்னார்வலர்கள் ஆம்புலன்சுகளை வழங்க முன்வந்தனர்.

 இதற்கான தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில்  நடந்தது. இதில்  5 ஆம்புலன்சுகளை மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். இந்த ஆம்புலன்சுகள் கொரோனா நோயாளிகளை வீடுகளில் இருந்து ஸ்கிரீனிங் மையத்துக்கும், அங்கிருந்து வீடு அல்லது சிகிச்சை மையங்களுக்கும் கொண்டு செல்ல பயன்படுத்த உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்த ஆம்புலன்ஸ் சேவை திங்கள்கிழமையிலிருந்து செயல்பாட்டுக்கு வந்தது.இதேபோல் ஸ்கிரீனிங் சென்டரில் கொரோனா பாதித்த நபருக்கு 5 வகையான பரிசோதனைகள் முடிந்த பிறகு அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்வது  என்றால் அந்த நபர் ஆம்புலன்ஸ் மூலமாக வீட்டுக்கு சென்று விடுவார்.

 

அதேசமயம் அந்த நபர்  மருத்துவமனையில்  தங்கி சிகிச்சை பெறும் நிலை வந்தால் அந்த நபரை ஸ்கிரீனிங் சென்டரில் இருந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மாநகராட்சி சார்பில் இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இந்த  பேருந்தில்  அந்த நபர் எங்கு சிகிச்சை பெற செல்கிறாரோ அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படு வார்கள்.

கொரோனா பாதித்த நபர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக செல்ல வேண்டுமென்றால் இந்த பேருந்திலேயே செல்லலாம். அதைப்போல் தொற்று பாதித்த நபர் கோரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்தப் பேருந்து  மூலம் செல்லலாம் என அமைச்சர் சு. முத்துசாமி, ஆட்சியர் சி. கதிரவன் ஆகியோர் தெரிவித்தனர்

Top