25/Apr/2021 01:20:50
ஈரோடு,ஏப்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆசனூர் அருகே சாலையில் நடமாடும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையான ஆசனூர் அரேப்பாளையம் பிரிவில் உள்ள சாலையில் சுமார் அரை மணி நேரம் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டு வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துக்குள்ளாகினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் தற்போது கோடைகாலம் என்பதால் யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நடமாடும் எனவும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.