logo
கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு- தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு- தமிழக அரசு அறிவிப்பு

15/Apr/2021 11:40:32

சென்னை, ஏப்:  கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் அடுத்த 8 வாரங்களுக்குள் நடத்தி முடிக்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் காரணம்காட்டி தமிழகத்தில் உள்ள கலை அறிவியல், பொறியியல்  கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அனைவரும் தேர்ச்சி எனவும்  அறிவிக்கப்பட்டது. மேலும், அரியர் தேர்வுக்கு பணம் கட்டியவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவதாகவும் தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரியர் தேர்வை எழுதாமல் அதற்காக பணம் செலுத்தியவர்கள்  தேர்ச்சி என அறிவித்தது ஏற்புடையது அல்ல என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்த வழக்கு விசாரணையில் அரியர் தேர்வை ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் தேர்வு எழுதாததவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படமாட்டாகள் எனவும்  தமிழக அரசு  நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, அடுத்த 8 வாரங்களுக்குள்  ஆன் லைனில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டுமெனவும். தேர்வை ஆன்லைனில் நடத்தி முடித்தது தொடர்பாக  ஜூன முதல்வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெ னவும் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Top