logo
ஈரோடு மாவட்டத்தில் அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே உணவு விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் அம்மா உணவகங்களில் பார்சலில் மட்டுமே உணவு விநியோகம்

11/Apr/2021 09:10:53

ஈரோடு, ஏப்: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில்  பார்சலில் மட்டுமே உணவு விநியோகிக்கப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திங்கள்கிழமை  முதல் அம்மா உணவகங்களில் பார்சலில்  மட்டுமே உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாநகரை  பொருத்த வரை 13 இடங்களில்அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மதியம் என இரண்டு வேளைகளில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் அம்மா உணவகங்களில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் பசியாற முடிந்தது. தற்போது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து  வருவதால் பொது இடங்க ளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  அதன்படி  திங்கள்கிழமை   முதல் அம்மா உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிக் கப்பட்டுள்ளது.பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது தெரியாமல் இன்று அம்மா உணவகத்துக்கு சிலர் சாப்பிட வந்தனர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகத்தின் நடவ டிக்கை குறித்த விவரத்தை  ஊழியர்கள் தெரிவித்தனர். எக்காரணம் கொண்டும் அம்மா  உணவகங்கள் மூடப் படாது எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top