10/Apr/2021 09:27:41
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் யானைகள் குளித்து மகிழ்வது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் மான் சிறுத்தை காட்டெருமை முள்ளம்பன்றி செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் மற்றும் ஆண்கள் காலை மதியம் மாலை என மூன்று வேளைகளிலும் கூட்டம் கூட்டமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன.
இது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. யானைகள் அணையில் இறங்கி துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி தாகம் தீர குடிக்கின்றனர் பின்னர் தண்ணீரை ஒன்றன் மீது ஒன்றாக துதிக்கையால் உறிஞ்சி பீச்சி அடிக்கின்றன. அணையில் குளித்து மகிழ்கின்றன. சிறிது நேரம் ஆனந்த குளியல் போடும் யானைகள் அணையிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன