logo
புதுக்கோட்டையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான  தொழில்முனைவோர்  பயிற்சி முகாம்

புதுக்கோட்டையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி முகாம்

29/Mar/2021 10:53:48

புதுக்கோட்டை, மார்ச்:   புதுக்கோட்டையில் நபார்டு வங்கியும்  அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையமும் (CESTADS)செஸ்டாட்ஸ் நிறுவனம் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவோருக்கான திட்டத்தின் கீழ் பயிற்சிமுகாம்  அறிவியல் இயக்க அரங்கில்   நடைபெற்றது .

பயிற்சித்திட்டத்தில் 83 தொழிலாளர்களுக்கு மாடு,ஆடு மற்றும் கோழி வளர்ப்பில் பயிற்சி வழங்கி,அனைவரும் தொழில் துவங்க வங்கி கடன் பெற உதவி செய்து,தொடர்ந்து தொழில்நுட்ப உதவி மற்றும் இதர உதவிகளைச் செய்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற துணை செய்கிறது.இந்த தொழிலாளர்கள் சிங்கப்பூர்,துபாய் போன்ற அயல்நாடுகளி லிருந்தும் மகாராஸ்ட்டிரம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் கோவிட் பெருந்தொற்று காரணமாக புதுக்கோட்டைக்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் ஆவர். 

நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் நடைபெறும் இத்திட்டம் 2 ஆண்டுகளுக்கு நடை முறையில் இருக்கும். இந்த இரண்டு ஆண்டுகளில் செஸ்டாட்ஸ் நிறுவனம்  உறுதுணையாக உதவி செய்யும். பயிற்சி  பெற்ற100-க்கும் மேற்பட்டவர்களுக்கு   சான்றிதழ் வழங்கும்  நிகழ்ச்சி நடை பெற்றது.

  நபார்டு வங்கியின்   மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ்.ஜெயஸ்ரீ தலைமை வகித்தார்.  செஸ்டாட்ஸ்  திட்ட ஒருங்கிணைப்பாளர்   எல்.பிரபாகரன்    வரவேற்றார்.   நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல பொது மேலாளர் என்.நீரஜா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். பயிற்சியாளர் , மணவாளன், செஸ்டாட்ஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  பயிற்சிஒ ருங்கிணைப்பாளர் வீரமுத்து நன்றி கூறினார்.



Top