logo
கோபி பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில்  தீக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

கோபி பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தீக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

04/Mar/2021 11:21:22

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டம்,  கோபிசெட்டிபாளையம்அருகே உள்ள சிறுவலூரில் பிரசித்திபெற்ற பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்டகிராமங்களை சேர்ந்த 200-க்கும்மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தங்களது நேர்த்திகடனை  செலுத்தினர்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேசிறுவலூர் பச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர் திருவிழாஒவ்வொருஆண்டும் தமிழ்மாதமான மாசியில்நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டுகொரோனாபொதுமுடக்கத்தால் திருவிழாநடைபெறாதநிலையில் இந்தாண்டுகடந்தமாதம் 17-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழாதொடங்கியது. அதனைத்தொடந்து இம்மாதம் 1-ஆம் தேதிசந்தனக்காப்பு அலங்காரமும் 2-ஆம் தேதி கிராமசாந்தியும் நடைபெற்றது.


 3-ஆம் தேதிகாப்பு கட்டுதல் பட்டத்தரசிஅம்மன் பொங்கல் வைத்தல் தி றப்பு மற்றும் தீ மூட்டுதல் போன்றநி கழ்வுகளைத் தொடர்ந்து 4-ஆம் தேதியான வியாழக்கிழமை  அதிகாலை அம்மை அழைத்தல், வாக்கு கேட்டல் நிகழ்வுகளைத் தொடர்ந்து திருக்கோடி ஏற்றப்பட்டு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் தலைமை பூசாரி சக்திவேல்மு தலில் தீக்குண்டம் இறங்கி நிகழ்வினைதொடங்கிவைத்தார். 


அதனைதொடர்ந்து 15 நாட்கள் கடும் விரதமிருந்த வீரமக்கள், பூசாரிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 10-க்கும் மேற்பட்டகிராமங்களை சேர்ந்த 200-க்கும்மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கிநேர்த்திகடன் செலுத்தினர்.சிலபெண் பக்தர்கள் கைகளில் வேப்பில்லை ஏந்தியும்குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டும் தீக்குண்டம் இறங்கினர். தீக்குண்டம் இறங்கியபக்தர்கள் அனைவருக்கும் பச்சைநாயகியம்மன் சிறப்புஅலங்காரத்தில் காட்சியளித்து அருள்பலித்தார். 

இவ்விழாவிற்குசிறுவலூர் காவல்துறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் குண்டம் இறங்கி வெளியேறிய பக்தர்களுக்கு கோயில் அறங்காவலர் குழுவின் சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவினைதொடந்து 5-ஆம் தேதி அபிஷேகபூஜை மற்றும் தேர் வீதி உலா வருதல் நிகழ்சியும் 6-ஆம் தேதி தேர் நிலைசேருதல் மண்டபக்கட்டளையும் 7-ஆம் தேதி மஞ்சள் நீராட்டு கருப்பராயன் பொங்கல் வைத்தல் விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Top