logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை: மாவட்ட  ஆட்சியர்  பி.உமாமகேஸ்வரி திடீர்  ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை: மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி திடீர் ஆய்வு

02/Mar/2021 11:01:33

புதுக்கோட்டை, மார்ச்: சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளையும், தேர்தல் பறக்கும்படையினரின் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


இது குறித்து மாவட்ட ஆட்சியர்  பி. உமாமகேஸ்வரி கூறியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல்  வருகின்ற 6.04.2021 -இல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப் பதிவை நடத்தும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் நேரில்   ஆய்வு செய்யப்பட்டது. 


 புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை காமராஜபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி, போஸ்நகா; நகராட்சி தொடக்கப்பள்ளி, கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குப்பதிவு மையங்களில் அமையவுள்ள வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்யப்பட்டன.


 ஆய்வின்போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் சாய்தள வசதி உள்ளிட்டவைகள் பாh;வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


 இதையடுத்து புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் மேற்கோண்டு வந்த வாகனத்தணிக்கை பணியினை திடீர் ஆய்வு செய்தார். 

இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா; விஜயலட்சுமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் ரமேஷ்குமார், வட்டாட்சியர் முருகப்பன் உள்பட பலர்    உடனிருந்தனர்.  


Top