logo
புதுக்கோட்டை அருகே 423 மகளிர்  சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5.32 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் விஜயபாஸ்கர் அளிப்பு

புதுக்கோட்டை அருகே 423 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5.32 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் விஜயபாஸ்கர் அளிப்பு

07/Feb/2021 10:43:32

புதுக்கோட்டை, பிப்:   புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் 423  மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.5.32 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிராமப்புறங்களில் உள்ள மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மகளிர் திட்டத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை  இலுப்பூர், அன்னவாசல் மற்றும் விராலிமலை வட்டாரங்களைச் சார்ந்த மகளிர்; சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, ஆதார நிதி, நலிவுற்றோர்; நிதி, வங்கி கடன் இணைப்பு, சாலையோர வியாபாரிகள் நிதி, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட நிதி, அம்மா இருசக்கர வாகனத் திட்டம் என பல்வேறு திட்டத்தின் கீழ் மொத்தம் 423 மகளிஹ்; சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.32 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 500 உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து காய்கறி செடிகள்  மற்றும் விதைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா இருசக்கர வாகனத்தின் மூலம் உழைக்கும் மகளிஹ்; தங்களது அன்றாட பணிகளுக்கு எளிதாக சென்றுவர முடியும். வங்கி கடன் உதவித் தொகையின் மூலம் சுயதொழில் செய்து, வருமானத்தை பெருக்கி பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். இதனால் மகளிர் மிகுந்த பயன்பெறுவார்கள். 


தமிழக அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும், பட்டம் மற்றும் பட்டயம் முடித்த பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இதேபோன்று இல்லத்தரசிகளின் கஷ்டத்தை போக்கும் வகையில் விலையில்லா மிக்சி, மின்விசிறி, கிரைண்டா; போன்றவை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

கர்ப்பிணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கப்படுவதுடன், அம்மா ஊட்டச்சத்துப் பெட்டகம், அம்மா குழந்தைகள் நலப் பாப்சு பெட்டகம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத் திட்டங்களை செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது என்றார் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ராமசாமி உள்ளிட்ட  அலுவலர்கள்  கலந்து கொண்டனர். 

Top