logo
ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் கொரோனோவால் 802 பேர் பாதிப்பு: குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்

ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் கொரோனோவால் 802 பேர் பாதிப்பு: குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்

02/Jan/2021 11:44:25

ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை வேகமாக கடந்தது. அதேநேரம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. தினசரி பாதிப்பு குறைய தொடங்கியது. குறிப்பாக தீபாவளிக்கு பிறகு தினசரி பாதிப்பு 50-க்கு கீழ் இருந்து வருகிறது. அதே நேரம் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

இதன்படி கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 802 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த டிசம்பர் மாதத்தில் நோய்த் தொற்றில் இருந்து 835 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த டிசம்பர் மாதத்தில் நான்கு பேர் மட்டுமே இறந்து உள்ளனர். டிசம்பர் மாதத்தில் இறப்பு எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 289 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர்

Top