logo
வெளிநாடுகளில் இருந்து ஈரோடுக்கு   இதுவரை வந்த 49 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறையினர் தகவல்

வெளிநாடுகளில் இருந்து ஈரோடுக்கு இதுவரை வந்த 49 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறையினர் தகவல்

29/Dec/2020 10:17:19

ஈரோடு, டிச: இங்கிலாந்து நாட்டில் உருமாறி உள்ள புதிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது சாதாரண கொரோனா தொற்றை விட வீரியம் மிக்கதாக இருப்பதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

அதன்படி இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 15-ஆம் தேதிக்கு பிறகு ஈரோட்டுக்கு வந்த 21 பேர் அடையாளம் காணப்பட்டு அனைவரையும் சுகாதாரத்துறையினர் வீடுகளில் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். மேலும் 21 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்தது எனினும் சுகாதாரத் துறையினர் அவர்களை வீடுகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர் . மேலும் அந்தந்த பகுதியில் சுகாதார துறையினர் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் மேலும் 28 பேர் இங்கிலாந்து,அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.

இந்த 28 பேரும் அடையாளம் காணப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு ள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. எனினும் 14 நாட்கள் இவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறும்போது: மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து  ஈரோட்டுக்கு வந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 முதற்கட்டமாக இங்கிலாந்திலிருந்து 21 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.அவர்கள் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து மேலும் 28 பேர் வந்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. 

எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை அந்தந்த சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கடந்த கடந்த 15 நாட்களில் ஈரோடு வந்தவர்கள் அவர்களே தாங்களாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். யாரும் தயங்க வேண்டாம் என்றார். 


Top