logo
ஈரோடு அருகே  மருத்துவ சேர்க்கையில் சிறப்பிடம் பெற்ற மாணவியின் மருத்துவச்செலை ஏற்றுக்கொண்ட மூங்கில் காற்று அறக்கட்டளை

ஈரோடு அருகே மருத்துவ சேர்க்கையில் சிறப்பிடம் பெற்ற மாணவியின் மருத்துவச்செலை ஏற்றுக்கொண்ட மூங்கில் காற்று அறக்கட்டளை

19/Nov/2020 06:58:05

பெருந்துறை: தமிழக அளவில் கம்யூனிட்டி ரேங்க் பட்டியலில் 8 இடம் பெற்ற மாணவியின்  5 ஆண்டுகால மருத்துவ  படிப்புச் செலவை ஏற்றது மூங்கில் காற்று அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. அதற்கான  முதல்கட்ட  நிதியுதவியை  அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார்  இன்று வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் ,ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிபாளையம் ஊராட்சி ,கரைப்பாளையம் புது காலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி  குமரவேல். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இவர் தனது குழந்தைகள் அனைவரையும் கூலிவேலை செய்து அரசு பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

தற்போது இவரது இரண்டாவது மகள் காவ்யா ஊத்துக்குளி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதினார். தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உத்தரவின் பெயரில் கம்யூனிட்டி ரேங்க் அடிப்படையில் காவ்யா தமிழக அளவில் 8-ஆவது ரேங்க் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவருக்கு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

ஆனால் அதற்கான கல்வி செலவு தொகையை கட்ட முடியாமல் தவித்து வந்தார். இதை அறிந்த பெருந்துறை மூங்கில் காற்று அறக்கட்டளை இந்த மருத்துவ கல்லூரி மாணவிக்கு  5  ஆண்டுகளுக்கான செலவை ஏற்க முன்வந்தது. இதன் நிறுவனத் தலைவராக பெருந்துறை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் இருந்து வருகிறார்.

 இந்நிலையில், அறக்கட்டளை நிர்வாகி ஜெயக்குமார் சண்முகப்பிரியா தம்பதியினர் மருத்துவக் கல்லூரி மாணவியின் முதற்கட்ட படிப்பு செலவுத்தொகையை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், கல்லூரி நிர்வாகம் அளிக்கும் பட்டியல் செலவுத் தொகையை முழுமையாக அறக்கட்டளை மூலம் செலுத்துவதாகவும் உறுதியளித்தனர். தமிழக முதல்வரின் உத்தரவுப்படி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த இந்த மாணவிக்கு தகுந்த நேரத்தில் அறக்கட்டளை மூலம் உதவி செய்தமைக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். 


Top