logo
உலக சிக்கன நாள்- முதல்வர் செய்தி

உலக சிக்கன நாள்- முதல்வர் செய்தி

30/Oct/2020 01:49:34

சென்னை: உலக சிக்கன நாள்  குறித்து  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட செய்தி:

மக்களிடையே சிக்கனம், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-30 ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.

சிக்கனம் வீட்டைக்காக்கும் சேமிப்பு நாட்டைக்காக்கும் என்ற முதுமொழிக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனும்  தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை  தனது வீட்டுக்கும் நாட்டுக்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எதிர்காலத்தேவைகளை உணர்ந்து மக்கள் சிக்கனமாக  வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாகத்திகழ்ந்திட  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப சிறுவயதிலிருந்தே சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி சேமிக்கும்  பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். சிற துளி பெருவெள்ளம் என்பதற்கேற்ப மக்கள் தாங்கள் ஈட்டிய பணத்தை அஞ்சல சேமிப்புத்திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சிறுகச்சிறுக சேமிக்கும் தொகை பன்மடங்காகப் பெருகி எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பளிக்கும்.

உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம் பெற அஞ்லகங்களில்  செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்புத்திட்டங்களில் சேர்ந்து பயன் பெற்றிட அன்புடன் வேண்டுகிறேன் என தனது செய்தியில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Top